திருத்துறைப்பூண்டி அருகே சாலையோரம் நின்ற லாரி மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற டாஸ்மாக் கடை ஊழியர் உயிரிழந்தார்.
எடையூர் -சங்கேந்தி சம்பாவெளி பகுதியைச் சேர்ந்தவர் ரெங்கையன் மகன் வடிவேல் (47). இவர், மேலமருதூர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்தார்.
இவர் வழக்கம்போல சனிக்கிழமை இரவு பணிநேரம் முடிந்ததும் கடையைப் பூட்டி விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.
மேலமருதூர் அருகே சென்றபோது சாலையோரம் பழுதடைந்து நின்ற லாரி மீது எதிர்பாராமல் மோதியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த வடிவேல், திருத்துறைப்பூணடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஞாயிற்றுக்கிழமை அவர் இறந்தார். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக