வாஷிங்டன்: ‘இந்தியாவின் பொருளாதார நிலை எப்படி இருக்கிறது தெரியுமா? குருட்டு தேசத்தில் ஒற்றைக்கண் ராஜா’ போன்ற நிலையில் உள்ளது’ என்று ரிசர்வ் வங்கி தலைவர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார். அமெரிக்காவில் மார்க்கெட் வாட்ச் என்ற வர்த்தக ஆன்லைன் பத்திரிகைக்கு ரகுராம் ராஜன் பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது: உலக வர்த்தக, பொருளாதார அரங்கில் இந்தியாவுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்று அவ்வப்போது பேசப்படுகிறது. ஆனால், உண்மை நிலை என்ன என்று பலரும் உணர வேண்டும். திறமையே இல்லாதவர்கள் மத்தியில் ஏதோ ஓரளவு திறமை உள்ளவன் பெரிதும் மதிக்கப்படுவான்; ஆனால், பெரிதாக சாதிக்க அவன் கஷ்டப்படுவான். போராடிக்கொண்டே இருப்பான். இந்த நிலையில் தான் இந்திய பொருளாதார நிலை உள்ளது.
குருட்டு தேசத்தில் ஒற்றைக்கண் மனிதன் ராஜாவாக இருந்தால் எப்படியிருக்கும்? இந்திய பொருளாதார நிலைக்கு இதை ஒப்பிடலாம். உலக பொருளாதார நிலையே இப்போது மிகவும் குழப்பமான அளவில் தான் உள்ளது. இதில் இந்திய பொருளாதாரம் எங்கு இருக்கிறது. திருப்தியான இடத்தில் தான் இருக்கிறதா என்றால் அதற்கு இன்னும் தூரம் செல்ல வேண்டும். இந்திய பொருளாதார வளர்ச்சியில் நடுத்தர நிலையை இந்தியா எட்டுவதற்கு முதலில் முயற்சி செய்ய வேண்டும். நுண்ணிய அளவில் தான் இந்திய ஸ்திரத்தன்மையை தக்க வைத்து கொண்டிருக்கிறது. அது தான் உண்மை. சமீப காலமாக சில நல்ல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை ஒப்புக்கொள்ளலாம். ஆனால், அதுவே, பொருளாதார வளர்ச்சிக்கு முழுமையான அளவில் உதவும் என்று சொல்ல முடியாது.
நடப்பு கணக்கு, நிதி பற்றாக்குறை போன்றவற்றில் இந்தியா கணிசமான அளவுக்கு முன்னேறி இருக்கிறது; இதை சாதனை என்று சொல்ல முடியும். அதுபோல பணவீக்கம் 11 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்துக்கு சரிந்து ள்ளது. இதனால் வட்டி வீதத்தை குறைக்க முடிந்தது. கட்டமைப்பு அம்சங்களில் அதிகமான சீர்திருத்தங்களுக்கு வழிவகை செய்யப்பட்டு வருகிறது. சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் அமலாக உள்ளது. வங்கி வராக்கடன் விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வங்கி செயல்பாடுகளில் வாடிக்கையாளர்களின் வசதிக்காக மொபைல் டு மொபைல் கணக்கு மாற்றம் உட்பட பல நவீன அம்சங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன. இப்படி பல தொழில்நுட்ப மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சீனாவை பார்த்து பெருமூச்சு விட தேவையில்லை. இந்தியா தனக்கென தனி பாணியை வகுத்து கொண்டு முன்னேற வேண்டும். நம் பலத்தை முதலீடாக்கி வளர வேண்டும். இவ்வாறு ரகுராம் ராஜன் கூறினார்.
நன்றி
தினகரன்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக