திருத்துறைப்பூண்டி விர்ச்சு தொண்டு நிறுவனம் மற்றும் தேசிய ஒன்றுக்கு மேற்பட்ட ஊனமுற்றோருக்கான மேம்பாட்டு நிறுவனம் சார்பில் பிரதம மந்திரி தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் மூலமாக பல்வகை ஊனமுற்றோர் பயனாளிகளான 25 நபர்களுக்கு 4 மாத கால இலவச கயிறு திரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
விர்ச்சு தொண்டு நிறுவன இயக்குனர் சேவியர் வரவேற்றார். சிட்டி யூனியன் வங்கி கிளை மேளாளர் சுரேஷ்பாபு தலைமை வகித்து, 25 பேருக்கும் சான்றிதழ் வழங்கி பேசினார். விழாவில் ராகவேந்திரா மாற்றுத்திறனாளிகள் பள்ளி இயக்குனர் ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் பயிற்றுனர் வாணி நன்றி கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக