அனுமதி இல்லாமல் தடுப்பூசி போட்டது தொடர்பான வழக்கில் போலீஸ் தேடிய பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டார்.
குழந்தைகளுக்கு தடுப்பூசி
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள ஆதிச்சபுரத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது32). ஓமியோபதி டாக்டர். இவருக்கு சொந்தமான மருத்துவமனை கோட்டூர் கடைவீதியில் உள்ளது. இங்கு மஞ்சள்காமாலை, காசநோய் தடுப்பூசிகள் குறைந்த செலவில் போடப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வினோத்குமாரின் மருத்துவமனையில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் உரிய அனுமதி இல்லாமல் தனியார் தொண்டு நிறுவனம் பெயரில் மருத்துவ முகாம் நடத்தி, குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டது தெரியவந்தது. இதுகுறித்து வட்டார மருத்துவ அதிகாரி மகேஷ்குமார், கோட்டூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஓமியோபதி டாக்டர் வினோத்குமாரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வரும் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மணலியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மகன் வெங்கடேஸ்வரன்(28) என்பவரை போலீசார் வலைவீசி தேடிவந்தனர்.
பட்டதாரி வாலிபர்
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் கோட்டூர்-மன்னார்குடி சாலையில் திருப்பத்தூர் கடைவீதியில் நின்று கொண்டிருந்த வெங்கடேஸ்வரனை கோட்டூர் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் எம்.ஏ.,பி.எட் படித்த வெங்கடேஸ்வரன், தொண்டு நிறுவனம் தொடங்கி, அதன் மூலம் மருத்துவ முகாம் நடத்தி மஞ்சள்காமாலை, காசநோய்களுக்கு தடுப்பூசி போடுவதாக கூறி கிராம மக்களை ஏமாற்றி பணம் வசூலித்தது தெரியவந்தது. மேலும் கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதி இல்லாமல் மருத்துவ முகாம் நடத்தி குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வெங்கடேஸ்வரனை கைது செய்தனர். பின்னர் அவரை மன்னார்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக