திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் வரும் கல்வியாண்டிற்காக மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத்தேர்வு வருகிற மே மாதம் 21 மற்றும் 22-ந் தேதி நடக்கிறது.
நுழைவுத்தேர்வு
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் 412 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. தற்போது மாணவர் விடுதிகள், ஆராய்ச்சி மாணவர் விடுதிகள், உயர்தர ஆய்வுக்கூடங்கள், விவாத அரங்கங்கள், நூலகம், கலையரங்கம் போன்ற கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன.
வரும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்காகன நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது.
மத்திய பல்கலைக்கழகத்தில் தற்போது 24 பாட வகுப்புகளுக்கான படிப்புகள் நடைபெற்று வருகிறது. வரும் கல்வியாண்டில் புதிதாக 6 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளது. அதன்படி பொருளியல், இந்தி மொழி, கணினி அறிவியல், பொருள் தொழில்நுட்பவியல் ஆகிய 4 முதுகலைப்பாடங்களும், பி.எஸ்சி. டெக்ஸ்டைல்ஸ், இசை சம்பந்தமான 2 பாடப்பிரிவுகள் தொடங்கப்படுகிறது.
இதில் முதுகலை பொருளியல் பாடத்தினை மாணவர்கள் முதல் 3 ஆண்டுகள் திருவாரூரிலும், இறுதி 2 ஆண்டுகள் சென்னை பொருளியல் கல்லூரியில் பயில்வார்கள். இதேபோல பி.எஸ்சி. டெக்ஸ்டைல்ஸ் பாடப்பிரிவு கோயம்புத்தூர் சர்தார் வல்லபாய்பட்டேல் பன்னாட்டு துணி வகை மற்றும் மேலாண்மை கல்வி நிலையத்தில் 40 மாணவர்களுக்கான சேர்க்கையோடு நடைபெறும்.
ஒப்பந்தங்கள்
முதுகலை தமிழ் பாடத்திற்கு சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துடனும், சமூக பணி பாடத்திற்கு மும்பையில் உள்ள டாட்டாவின் அடிப்படை உயர்கல்வி மையத்தோடும், சட்டம் சார்ந்த குறுகிய கால பாடத்திற்கு பெங்களூரு தேசிய சட்டப்பள்ளி பல்கலைக்கழகத்துடனும், நீர் மேலாண்மை பாடத்திற்கு கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துடனும் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வரும் கல்வியாண்டின் மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத்தேர்வு வருகிற மே மாதம் 21 மற்றும் 22-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு, அரியானா, ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகம், கேரளம், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய 9 மத்திய பல்கலைக்கழகங்கள் இணைந்து பொது நுழைவுத்தேர்வு நடத்துகிறது. மத்திய அரசின் இடஒதுக்கீட்டு சலுகைகளுடன் பொது நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் வருகிற ஜூன் மாதம் 17-ந் தேதி வெளியாகும்.
இந்த தகவலை பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக