செவ்வாய், 19 ஏப்ரல், 2016

குளங்களில் ஆழம் தெரியாமல் யாரும் இறங்காதீர்கள் !!! -காவல்துறை

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குளங்களில் ஆழம் தெரியாமல் யாரும் இறங்காதீர்கள் என்று மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

திருவாரூர் தியாகராஜர் கோயில், திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாள் கோயில், விளமல் பதஞ்சலி மனோகர் கோயில், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில், திருக்கொள்ளிக்காடு பொங்குசனீசுவரர் கோயில் மற்றும் மாவட்டத்தில் பரவலாக ஆங்காங்கே ஆயிரக்கணக்கான குளங்கள் உள்ளன.

கோடைகாலம் என்பதால் சில குளங்களில் நீர் அதிகமாவும், குறைவாகவும் இருக்கும். பல குளங்களில் நீர் வற்றியிருக்கும்.

வெளியூர் மற்றும் உள்ளூர் மக்கள் நீர் உள்ள குளங்களில் இறங்கும்போது பாதுகாப்பாக இறங்க வேண்டும். ஆழம் தெரியாமல் யாரும் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என்று மாவட்ட காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

காவல்துறை இயக்குநர் அசோக்குமார் பரிந்துரையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன் உத்தரவின்பேரில், மாவட்டத்திலுள்ள அனைத்து குளங்களிலும் எச்சரிக்கை விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka