கோடை காலத்தில் உடலின் வெப்ப நிலையை நிலையாக வைத்துக் கொள்வதற்காக வியர்வையாக வெளியாகிறது. அதே நேரம் இந்த வியர்வையின் காரணமாக உடலில் வியர்க்குரு போன்ற தொல்லைகளும் ஏற்படுகின்றன. நமது அன்றாட சமையலில் பயன்படும் பாசி பயறை பயன்படுத்தி வியர்குருவை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என பார்க்கலாம். இதற்கு தேவையான பொருட்கள் பாசிப்பயறு மாவு, வெள்ளரி சாறு.
வெள்ளரிக்காயை தோல் சீவி விட்டு அதை சாறாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் பாசி பயறு மாவுடன், சுமார் 3 அல்லது 4 ஸ்பூன் வெள்ளரி சாறை சேர்க்க வேண்டும். இந்த இரண்டு பொருட்களுமே உடலுக்கு குளிர்ச்சியை தரக் கூடிய ஒன்றாகும். இவ்வாறு கலந்த கலவையை உடலில் வியர்க்குரு தாக்கம் உள்ள இடங்களில் நன்றாக பூசிக் கொள்ள வேண்டும். சுமார் கால் மணி நேரத்திற்கு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வியர்க்குருவால் ஏற்படும் நமைச்சல், எரிச்சல் போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.
அதே போல் வியர்க்குரு, கொப்புளங்களை சமாளிக்க வேப்பிலையை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம். இதற்கு தேவையான பொருட்கள் வேப்பிலை, மஞ்சள் பொடி. வேப்பிலையை நன்றாக அரைத்து சாறாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சாற்றுடன் மஞ்சள் பொடியை தேவையான அளவு எடுத்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இதை வியர்க்குரு, கொப்புளங்கள் உள்ள இடங்களில் நன்றாக மேற்பூச்சாக பூசி வர, கொப்புளங்கள் ஆறும். வியர்க்குருவின் தாக்கம் தணியும். குளிப்பதற்கு முன்னதாக இதை நாம் 15 நிமிடங்களுக்கு முன்பு பூசி விட்டு பின்னர் குளிக்கலாம்.
இதை காலை மாலை இரு வேளைகளிலும் பயன்படுத்தலாம். மேலும் முல்தானி மட்டியை பயன்படுத்தியும் வியர்க்குரு தொடர்பான தொல்லைகளில் இருந்து விடுபடலாம். முல்தானி மட்டி நாட்டு மருந்து கடைகளில் இயல்பாக கிடைக்கும். இந்த முல்தானி மட்டி பொடியையும், வெள்ளரி சாறில் கலந்து பூசிக் கொண்டு பின்னர் குளித்து வர வியர்க்குரு போன்ற பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். மேலும் தோலும் பொலிவு பெறும்.கோடையில் ஏற்படும் வியர்க்குருவை சமாளிக்க உள்மருந்து ஒன்றை தயார் செய்யலாம்.
இதற்கு தேவையான பொருட்கள் மாங்காய் துண்டுகள், வேப்பம்பூ, உப்பு, பனங்கற்கண்டு. மாங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு வேப்பம் பூவை சேர்த்துக் கொள்ள வேண்டும். மாங்காய் நன்றாக வேகும் அளவுக்கு நீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இந்த நீரை வடிகட்டி விட்டு நன்றாக வெந்த மாங்காய் துண்டுகள்-வேப்பம்பூ கலவையை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் சிறிதளவு பனங்கற்கண்டு சேர்க்க வேண்டும்.
பின்னர் இதை தேவையான அளவு நீரில் கலந்து கொள்ள வேண்டும். மாங்காய் துண்டுகள் கலந்த இந்த நீரை எடுத்துக் கொள்வதன் மூலம் உடலின் வெப்ப நிலையை சமன்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. இதன் மூலம் கோடை கால பிரச்னைகளில் இருந்து விடுபட உதவுகிறது. மாங்காய் புளிப்பு மற்றும் உஷ்ணம் தரக் கூடிய ஒன்றாகும். அதை வேக வைத்து எடுத்துக் கொள்வதன் மூலம் அது உஷ்ணம் தராமல் உதவுகிறது. இவ்வாறு நாம் அன்றாடம் கிடைக்கும் பொருட்களை கொண்டு கோடை கால நோய்கள் வராமல் உடலை பாதுகாத்துக் கொள்ளலாம்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக