திருவாரூர் மாவட்டத்தில் 4 பேரவைத் தொகுதிகளில் தேர்தல் பறக்கும் படை மூலம் இதுவரை ரூ. 1.96 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான எம். மதிவாணன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2016 பேரவைத் தேர்தலில் தேர்தல் செலவினத்தை கண்காணிப்பது குறித்து திருவாரூர் மாவட்டத்தில் தொகுதிக்கு 3 குழுக்கள் என திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய 4 தொகுதிகளுக்கும் 12 பறக்கும் படை குழுக்கள், 12 நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மார்ச் 4-ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 1 கோடியே 96 லட்சத்து 60 ஆயிரத்து 797 கைப்பற்றப்பட்டு, அதன்பிறகு உரிய ஆவணங்களின் அடிப்படையில் ரூ. 1 கோடியே 93 லட்சத்து 52 ஆயிரத்து 967 விடுவிக்கப்பட்டுள்ளன. மேலும், ரொக்கம் அல்லாத பிற இனங்களைக் கைப்பற்றுகை செய்த வகையில் மொத்தம் 4 இனங்களில் 3 இனங்கள் உரிய ஆவணங்களின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளன. தேர்தல் வழக்காக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பேரவைத் தொகுதிக்கு ஒருகுழு வீதம் 4 தொகுதிக்கும், 4 விடியோ கண்காணிப்புக் குழுக்களும், 4 விடியோ உற்று நோக்கு குழுக்களும், 4 கணக்கீட்டுக் குழுக்களும் அமைக்கப்பட்டு தேர்தல் செலவீனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு மூலம் செய்தித்தாள் விளம்பரங்கள், உள்ளுர் தொலைக்காட்சிகளில் தேர்தல் விதிமீறல்கள் கண்காணிப்பட்டு வருகின்றன.
இதுவரை இணையதளம் மூலம் 92 புகார்கள் வரப்பெற்று 91 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி மூலம் 28 புகார்கள் வரப்பெற்று அனைத்து புகார்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளன என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக