ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

திருத்துறைப்பூண்டி லயன்ஸ் சங்கத்துக்கு மாவட்ட ஆளுநர் வருகை

Image result for lions clubதிருத்துறைப்பூண்டியில் உள்ள லயன்ஸ் சங்கம், லியோ சங்கத்துக்கு மாவட்ட ஆளுநர் அதிகாரப்பூர்வ வருகை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு லயன்ஸ் சங்கத் தலைவர் கே.எஸ். செந்தில்குமார் தலைமை வகித்தார். செயலர் அறிக்கையை லயன்ஸ் சங்கச் செயலர் பொ. சக்கரபாணி, லியோ சங்கத் தலைவர் பி. பாலாஜி ஆகியோர் வாசித்தனர். மண்டலத் தலைவர் ஜெ. ரவிச்சந்திரன், வட்டாரத் தலைவர் எம். செபாஷ்ரோலி ஆகியோர் ஆய்வுரை வழங்கினர்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆளுநர் எஸ். வேதநாயகம் சிறப்புரையாற்றினார்.

கண்தானம் வழங்கிய வலிவலம் எம். தியாகராஜதேவர், மடப்புரம் ஏ.ஒய். செபஸ்டின் உள்ளிட்ட 9 பேர், கண்தானத்துக்கு உதவிய என். காசிநாதன், இலவச கால்நடை சிகிச்சை அளித்த மருத்துவர் தெ. ராமலிங்கம் உள்ளிட்டோர், பாரம்பரிய நெல் மீட்பாளர் நெல்ஜெயராமன், மாநில நல்லாசிரியர்கள் அருள்சகோதரி அந்தோனிமேரி, பி. சரவணன், லயன்ஸ் சங்க நல்லாசிரியர் விருது பெற்ற அ. முகம்மதுரபீக், பள்ளி தலைமை ஆசிரியர்கள் இரா. செல்லத்துரை, அ. குமுதம், எம். தங்கராசு உள்ளிட்ட 18 பேர், முதியோர் இல்ல நிர்வாகிகள் பாரதமாதா தொண்டு நிறுவன இயக்குநர் எடையூர் மணிமாறன், நம்பிக்கை செளந்தர்ராஜன், நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் ஏ.பி. குமணன், ஆர். ஜெரால்டின் ஜெயசீலா, மகாதேவி உள்ளிட்டோருக்கு நினைவுப் பரிசுகளை மாவட்ட முதல் பெண்மணி சாந்தி வேதநாயகம் வழங்கி கெளரவித்தார்.

நிகழ்ச்சியை முன்னாள் தலைவர் செ. நாராயணமூர்த்தி, எஸ். ஜோசப்ராஜ் ஆகியோர் தொகுத்து வழங்கினர். செயலர் பொ. சக்கரபாணி நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka