திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை தொகுதியில் புதன்கிழமை இந்திய கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கு.பிரேம்குமாரிடம் வேட்புமனு அளித்தனர்.
திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை (தனி) தொகுதியில் தி.மு.க வேட்பாளர் ஆடலரசன் மட்டும் திங்கள்கிழமை பேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
புதன்கிழமை தே.மு.தி.க, மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா. அணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் க.உலகநாதன் வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் கு.பிரேம்குமாரிடம் அளித்தார்.
இவரை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.பழனிச்சாமி, த.மா.கா. மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.கணேசதேவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலர் ஐ.வி.நாகராஜன், ம.தி.மு.க. நகர செயலர் கோவி.சேகர் உள்ளிட்டோர் முன்மொழிந்தனர். இதில் கூட்டணி கட்சி மாவட்ட செயலர்கள் குடவாசல் தினகரன் (தமிழ்மாநில காங்கிரஸ்) பாலாஜி (தே.மு.தி.க) வி.த.செல்வன் (விடுதலைச்சிறுத்தைகள்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவருக்கு இருசக்கர வாகனங்கள், ஸ்கார்பியோ கார் மற்றும் ஓட்டு வீடு உள்ளிட்ட ரூ. 18 லட்சம், அவரது மனைவி சுசீலாவுக்கு ரூ.6 லட்சம் மதிப்புள்ள சொத்துகளும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கடன்இல்லை.
பா.ஜ.க. சார்பில் கோட்டூர் அருகே உள்ள சின்னகுருவாடியைச் சேர்ந்த கோ.உதயகுமார் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். இவர் மாவட்ட செயலர் இளசுமணி, மாவட்ட அமைப்புச் செயலர் ராகவன், வழக்குரைஞர் அணி நிர்வாகி ராஜவேலு, மாவட்ட பொதுச் செயலர் டி.ஆர்.கணேசன் உள்ளிட்டோர் முன்மொழிந்தனர்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் செ.ச.சரவணகுமார் வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் கு.பிரேம்குமாரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இவரை அந்தக் கட்சியின் மாவட்ட செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் முன் மொழிந்தனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக