உலகிலேயே மிகவும் அதிக வயதான நபர் என்னும் பெருமையை சுதந்திரப் போராட்ட வீரரும், நேதாஜியின் கார் ஓட்டுநருமான கர்னல் நிஜாமுதீன் படைத்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், ஆஸம்கரில் உள்ள முபாரக்பூரில் வசிக்கும் அவர், அங்குள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் சேமிப்புக் கணக்கு தொடங்க தனது மனைவி அஜ்புனிஷாவுடன் வந்தார். அப்போது அவர், கடந்த 1900-ஆம் ஆண்டில் தாம் பிறந்ததற்கு ஆதாரமாக வாக்காளர் அடையாள அட்டையை அளித்தார்.
அதன்படி, அவருக்கு தற்போது 116 வயதும், 3 மாதங்கள் மற்றும் 14 நாள்களும் ஆகின்றன. இதற்கு முன்பு, ஜப்பானைச் சேர்ந்த 114 வயதான நபர் அந்தப் பெருமையை பெற்றார். இந்நிலையில், அவரை விட 2 வயது அதிகம் என்பதால், உலகிலேயே அதிக வயதான நபர் எனும் பெருமையை நிஜாமுதீன் பெற்றுள்ளார்.
இந்திய சுதந்திர போராட்டத்தின்போது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவத்தை (ஐஎன்ஏ) உருவாக்கியபோது, அவருடன் இணைந்து நிஜாமுதீன் முக்கியப் பங்காற்றினார். மேலும், நேதாஜியின் கார் ஓட்டுநராகவும் அவர் செயல்பட்டார்.
அவரது மனைவி அஜ்புனிஷாவுக்கு தற்போது 107 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக