திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதி திமுக வேட்பாளர் ப. ஆடலரசன் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதியின் திமுக வேட்பாளராக முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், குன்னலூர் ஊராட்சி மன்றத் தலைவர் ப. ஆடலரசன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கே. பிரேம்குமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்து, வேட்பாளர் கடைப்பிடிக்க வேண்டிய உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார். மாற்று வேட்பாளராக வழக்குரைஞர் ராமகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்புமனுவுடன் அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திர விவரம்:
அசையும் சொத்து: ரூ. 1.50 லட்சம் கையிருப்பு. இருசக்கர வாகனம் ரூ. 30,000, பொலிரோ கார் ரூ. 8 லட்சம், (80 கிராம் தங்கம்) ரூ. 1.60 லட்சம் என மொத்தம் ரூ. 11.50 லட்சம் உள்ளது.
அசையா சொத்து: 12.59 ஏர்ஸ் நிலத்தின் மதிப்பு ரூ. 50 லட்சம் எனக் குறிப்பிட்டுள்ளார். கடன் விவரம் குறித்து தெரிவிக்கப்படவில்லை. அப்போது, கட்சியின் திருவாரூர் மாவட்ட வழக்குரைஞர் அணி செயலர் கோ. தருமராஜன், பொதுக்குழு உறுப்பினர் சிவசாமி, முத்துப்பேட்டை ஒன்றியச் செயலர் இரா. மனோகரன், நகர காங்கிரஸ் தலைவர் ப. எழிலரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதில் நாகை மக்களவை முன்னாள் உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன், நகர திமுக செயலர் ஆர்.எஸ். பாண்டியன், ஒன்றியச் செயலாளர்கள் முகில. ராஜேந்திரன், வி.எஸ்.ஆர். தேவதாஸ், காங்கிரஸ் தொகுதி பொறுப்பாளர் தாஹிர், வட்டார
காங்கிரஸ் செயலர் சங்கு. ராஜகோபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக