திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே கணவரை அடித்துக் கொலை செய்த வழக்கில் மனைவி உள்பட இருவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். இருவர் தேடப்பட்டு வருகின்றனர்.
முத்துப்பேட்டையை அடுத்த வீரன்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல். அவரது மகன்
சிவசங்கரன் (49). இவரது வீட்டின் அருகே வசிப்பவர் ஜி. செந்தில்குமார் (27). இவருக்கும், பானுமதிக்கும் தகாத உறவு இருந்து வந்ததாம். கடந்த 8-ஆம் தேதி சிவசங்கரன் குடித்து விட்டு மனைவியுடன் தகராறு செய்தாராம். அப்போது செந்தில்குமார், ஆர். நடராஜன், குணசேகரன் ஆகியோரை பானுமதி அழைத்து தன்னை தாக்கிய கணவரை தாக்குமாறு கூறினாராம். அதையடுத்து சிவசங்கரன் தாக்கப்பட்டதில், அவர் பலத்த காயமடைந்தார்.
சிவசங்கரனை அவரது சகோதரி சரோஜா திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிவசங்கரன் வியாழக்கிழமை இறந்தார்.
முத்துப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து சிவசங்கரனின் மனைவி பானுமதி, தாக்குதலில் ஈடுபட்ட செந்தில்குமார் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இருவரை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக