திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மத்திய தேர்தல் விழிப்புணர்வு பார்வையாளர் விஜய்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கட்டுப்பாட்டு அறை
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் பிரேம்குமார் முன்னிலையில், மத்திய தேர்தல் விழிப்புணர்வு பார்வையாளர் விஜய்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு இதுவரை வரப்பெற்ற புகார்கள் குறித்தும், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் உதவி தேர்தல் நடத்தும் அலுலர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் 100 சதவீத வாக்காளர்கள் வாக்களிக்கும் விதமாக மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்தும், இதுவரை புதிய வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட விவரங்கள் குறித்தும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கேட்டறிந்தார். பின்னர் வாக்காளர் சேவை மையத்தை பார்வையிட்டு பெறப்பட்ட விண்ணப்பங்களும், அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுரை
இதை தொடர்ந்து நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி, எடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி, சங்கேந்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வடகாடு கோவிலு£ர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி நிலையங்களை பார்வையிட்டு முதியோர்கள் வாக்களிப்பதற்கும், மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கும் சாய்தள வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா எனவும், குடிநீர், மின்சார வசதிகள் போன்ற அடிப்படைவசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார். பின்னர் முத்துப்பேட்டை புதிய பஸ் நிலையத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்கும் விதமாக பொதுமக்களிடம் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒலி¢பெருக்கியுடன் கூடிய ஆட்டோக்கள் மூலம் பிரசாரம் செய்யும் பிரசார வாகனத்தை மத்திய தேர்தல் விழிப்புணர்வு பார்வையாளர் விஜய்குமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதன் மூலம் தேர்தல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் திருத்துறைப்பூண்டி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பழனிவேல், தேர்தல் துணை தாசில்தார் சங்கர், தேர்தல் பறக்கும் படை அலுவலர் வாசுதேவன் உள்பட கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக