திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நீர்முளை ஜீவா தெருவைச் சேர்ந்தவர் சுப்பையன். இவருடைய மகன் அய்யப்பன்(வயது 28). அதே தெருவைச் சேர்ந்த இவரது உறவினர் தங்கராசு. இருவரும் விவசாயிகள். இவர்கள் இருவரும் பள்ளங்கோவிலில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மடப்புரம் அருகே சென்றபோது மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறி அருகில் இருந்த பனைமரத்தில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தங்கராசு இறந்தார். படுகாயமடைந்த அய்யப்பன் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலு, சப்–இன்ஸ்பெக்டர் கல்யாணசுந்தரம் ஆகியோர் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
ஞாயிறு, 8 மார்ச், 2015
மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக