திங்கள், 2 மார்ச், 2015

களப்பாள்:கூட்டுறவு அங்காடி ஊழியரை தற்கொலைக்கு தூண்டியதாக 3 பேர் மீது வழக்கு

கூட்டுறவு அங்காடி பணியாளரை தற்கொலைக்கு தூண்டியதாக 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், நாராயணபுரம் களப்பாள் கிராமத்தைச் சேர்ந்தவர் வி. சாமிநாதன் (49). இவர் அதே பகுதியில் உள்ள கூட்டுறவு அங்காடியில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். மேட்டுப்பாளையம் கிராமத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவருக்கு கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது.

குறிச்சிமூலையைச் சேர்ந்த சந்தானம் என்பவரிடம் சாமிநாதன் ரூ. 40 ஆயிரம் கடன் வாங்கி இருந்தாராம். இதனிடையே, சந்தானம் தனது நண்பர்களுடன் வந்து பணத்தை கேட்டபோது, பணத்தை கொடுத்துவிடுவதாக கூறி வந்தாராம்.

இந்நிலையில், திங்கள்கிழமை திருத்துறைப்பூண்டி-மன்னார்குடி பிரதான நெடுஞ்சாலையோரம் மடப்புரம் கிராமத்தில் உள்ள அரசு மதுபானக்கடைக்கு பின்னால் தற்கொலை செய்து கொண்டு சாமிநாதன் இறந்து கிடந்துள்ளார்.

இதுதொடர்பாக சாமிநாதனின் மனைவி விஜயலெட்சுமி, திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதில் குறிச்சிமூலையைச் சேர்ந்த சந்தானம், கருப்புக்கிளார் கிராமத்தைச் சேர்ந்த க. வீரமணி மற்றும் அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத ஒரு நபர் ஆகிய 3 பேரும் கடன் பணத்தை கேட்டு மிரட்டியதாகவும், இதனாலேயே தனது கணவர் இறந்துள்ளதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த 3 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka