புதன், 18 மார்ச், 2015

திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் 16 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி


திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் 16 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை மன்னார்குடி கோட்டம் சார்பில் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள 32 ஊராட்சிகளில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. குன்னூர் தோளாச்சேரியில் நடந்த முகாமை ஒன்றியகுழு தலைவர்  வேதநாயகி சிங்காரவேலு துவக்கி வைத்தார். உதவி இயக்குநர் டாக்டர் லூர்துசாமி, ஊராட்சி மன்ற தலைவர் விஜிலா முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
கொருக்கை ஊராட்சியில் முகாம் நிறைவுற்றது. முகாம் ஒவ்வொரு கிராமங்களிலும் காலை 6 மணி முதல் 9 மணி வரை, மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடைபெற்றது. கால்நடை மருத்துவர் ராமலிங்கம் தலைமையில் டாக்டர்கள் சுரேந்தர், காவ்யா மற்றும் கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் முகாமில் கலந்து கொண்டனர். 16 ஆயிரம் கால்நடைகளுக்கு 8வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை டாக்டர் ராமலிங்கம் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் செய்திருந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka