திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொக்கலாடி தெற்கு குடியிருப்பை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது40). விவசாயி. இவருடைய கூரை வீட்டில் நேற்று திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலைய அதிகாரி கோபால்சாமி மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வீட்டில் இருந்த கட்டில், பீரோ உள்ளிட்ட ரூ.1 லட்சம் பொருட்கள் எரிந்து சாம்பலாயின. விபத்தில் பாதிக்கப்பட்ட பாலமுருகன் குடும்பத்துக்கு ரூ. 5 ஆயிரம் மற்றும் நிவாரண பொருட்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டது. நிவாரண உதவியை தாசில்தார் மதியழகன், ஒன்றியக்குழு தலைவர் வேதநாயகி சிங்காரவேலு ஆகியோர் வழங்கினர். அப்போது ஒன்றியக்குழு துணை தலைவர் வெற்றிவேல், வருவாய் அலுவலர் சிவதாஸ் ஆகியோர் இருந்தனர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
ஞாயிறு, 8 மார்ச், 2015
திருத்துறைப்பூண்டியில் கூரை வீடு எரிந்து நாசம் ரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொக்கலாடி தெற்கு குடியிருப்பை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது40). விவசாயி. இவருடைய கூரை வீட்டில் நேற்று திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலைய அதிகாரி கோபால்சாமி மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வீட்டில் இருந்த கட்டில், பீரோ உள்ளிட்ட ரூ.1 லட்சம் பொருட்கள் எரிந்து சாம்பலாயின. விபத்தில் பாதிக்கப்பட்ட பாலமுருகன் குடும்பத்துக்கு ரூ. 5 ஆயிரம் மற்றும் நிவாரண பொருட்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டது. நிவாரண உதவியை தாசில்தார் மதியழகன், ஒன்றியக்குழு தலைவர் வேதநாயகி சிங்காரவேலு ஆகியோர் வழங்கினர். அப்போது ஒன்றியக்குழு துணை தலைவர் வெற்றிவேல், வருவாய் அலுவலர் சிவதாஸ் ஆகியோர் இருந்தனர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக