ஞாயிறு, 8 மார்ச், 2015

திருத்துறைப்பூண்டி புதிய பஸ் ஸ்டாண்ட் அணுகுசாலை கம்பிகள் பெயர்ந்து போக்குவரத்திற்கு லாயக்கற நிலையில் உள்ளது சீர் பெறுமா புதிய பஸ் ஸ்டாண்ட் அணுகுசாலை! திருத்துறைப்பூண்டி நகரவாசிகள் எதிர்பார்ப்பு!


திருத்துறைப்பூண்டியில் குண்டு குழியுமாக மாறி ஆறு மாதங்களாகியும் சீரமைக்கப்படாத புதிய பஸ் ஸ்டாண்ட் அனுகுசாலையை நகராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என்று நகர்வாசிககளும், வர்த்தகர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்துறைப்பூண்டி புதிய பஸ் ஸ்டாண்ட் நகராட்சி நிர்வாகத்தின் பராமரிப்பில் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக குண்டும் குழியுமாக கிடக்கும் பஸ் ஸ்டான்ட் செல்லும் வாகனமும் சாலையால் அனைவரும் அவத்திப்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளது.

தினந்தோறும் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து சொல்லும் நூற்றுக்கணக்கான பஸ்களும் அணுகு சாலையின் அகலபாதாலக்குளிகளில் ஆடி அசைந்து சொல் வேண்டிய நிலை உள்ளது. அணுகு சாலையின் அவல நிலையால் வெளியூர் செல்பவர்கள் வணிகர்கள் ஆஸ்பத்திரி செல்வோர்கள் என்று ஆயிரக்கனக்கானோர் இந்த பல்லாங்குழி சாலை வழியாக பரிதாப பயணம் மேற்கொள்கின்றனர்.

இவ்வழி பஸ் ஸ்டாண்டிற்கு செல்லும் இரு சக்கர வாகனங்கள் ஆட்டோக்கள் உள்ளிட்டவை கரணம் தப்பினால் மரணம் என்ற விதத்திலேயே பயணத்தை தொடர வேண்டிய அவல நிலை உள்ளது. கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு புதிதாக போடப்பட்ட ஒரே மாதத்தில் குண்டும் குழியுமாக மாறிய அணுகு சாலையானது மீண்டும் சீரமைக்கைப்பட போதும் அடுத்த ஒரு மாதத்திலேயே தனது பழைய நிலையை அடைந்து விட்டது. அணுகுசாலையை சிமென்ட் சாலையாக மற்ற வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவும் என்ன காரணத்தினாலோ கைவிடப்பட்டது.

பொதுமக்கள் நடக்க முடியாத அளவிற்கு குண்டும், குழியுமாக மாறியுள்ளது இந்த சாலை அண்மையில் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்லும் பல்வேறு பஸ்களின் படிக்கட்டுகளை பதம் பார்த்ததால் உடைந்து தொங்கும் அவலத்துடன் அரசு பஸ்கள் தங்கள் பயணத்தை தொடர்ந்த வண்ணம் உள்ளன.

அதேபோல் இருசக்கர வாகனங்களில் செல்வோர்கள் விபத்துக்குள்ளாகும் வேதனை சம்பவங்களும் அன்றாடம் பஞ்சமில்லை.எனவே போர்க்கால அடிப்படையில் நகராட்சி நிர்வாகம் புதிய பஸ் ஸ்டாண்ட் அனுகுசாலையை சீரமைத்து சிமெமாற்றி ன்ட் சாலையாக பொதுமக்கள் நலன் காக்க வேண்டும்மென்று அனைத்துதரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka