திருத்துறைப்பூண்டி,: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள எழிலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் விளையாட்டு, ஆண்டு விழா மற்றும் இலக்கிய மன்ற நிறைவு விழா நடைபெற்றது.
ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன், தலைமையாசிரியர் தங்கராசு தலைமை வகித்தனர். பிடிஏ தலைவர் ரெங்கசாமி முன்னிலை வகித்தார். ஆண்டறிக்கையை ஆசிரியை உமாமகேஸ்வரி வாசித்தார். விழாவில் பல்சுவைப்பாவலர் அண்ணா சிங்காரவேலு இலக்கிய சொற்பொழிவாற்றினார். ஒன்றியகுழு தலைவர் வேதநாயகி சிங்காரவேலு, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். விழாவில் தலைமையாசிரியர்கள் சிங்காரவேலன், நந்தகுமார், ஆரோக்கியம், சுபாஷ், பட்டதாரி ஆசிரியர்கழக மாவட்ட தலைவர் துரைராஜ், பிஆர்சி மேற்பார்வையாளர் கருணாமூர்த்தி, கவுன்சிலர் சகாதேவன், முன்னாள் கவுன்சிலர் கோவிந்தராஜ், ஊராட்சி துணைத் தலைவர் தண்டாயுதபாணி, நிலவள வங்கி துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், பிடிஏ துணைத் தலைவர் வேதையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆசிரியை விஜயலெட்சுமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆசிரியர் சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக