வெள்ளி, 6 மார்ச், 2015

திருவாரூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை மாணவ, மாணவிகள் 14,722 பேர் பிளஸ் 2 தேர்வை எழுதினர்.


திருவாரூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை மாணவ, மாணவிகள் 14,722 பேர் பிளஸ் 2 தேர்வை எழுதினர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வு வியாழக்கிழமை தொடங்கி மார்ச் 31-ம் தே தி வரை நடைபெறுகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் 41 தேர்வு மையங்களில் 6,100 மாணவர்கள், 8,622 மாணவிகள் என மொத்தம் 14,722 பேர் தேர்வெழுதினர்.
தேர்வு நியாயமாக முறைகேடுகள் இன்றி நடக்க 10 தேர்வு அறைக்கு 1 பறக்கும் படையினர் வீதம் 100 பறக்கும் படையினர் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தவிர முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர் தலைமையில் பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அறை கண்காணிப்பாளர்கள், நிலையான பறக்கும் படை அலுவலர்கள், கட்டு காப்பாளர்கள், வழித்தட அலுவலர்கள், துறை அலுவலர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை உறுப்பினர்கள், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திருவாரூர் ஜிஆர்எம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வு மையத்தை மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணி, கோட்டாட்சியர் முத்துமீனாட்சி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நாகப்பட்டினத்தில்18,077பேர் எழுதினர்
நாகப்பட்டினம், மார்ச் 5: நாகப்பட்டினம் மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வை 18,077 பேர் எழுதினர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் வியாழக்கிழமை தொடங்கின. நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளிகளில் பயின்ற 7,521 மாணவர்களும், 10,713 மாணவிகளும் என மொத்தம் 18,234 பேர் தேர்வு எழுத தகுதி பெற்றனர். ஆனால்,
வியாழக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 தேர்வில் நாகை மாவட்டத்தில் 157 பேர் தேர்வுக்கு வரவில்லை.

நாகை மாவட்டத்தின் தேர்வுப் பணி கண்காணிப்பாளராக பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (இடைநிலைக் கல்வி) நியமிக்கப்பட்டுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட தேர்வுக் குழு உறுப்பினர்கள், கல்வித்துறை அலுவலர்களுடன் இணைந்து தேர்வுப் பணிகளை கண்காணித்தனர்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், முதல்வர் (ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், குருக்கத்தி) மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோர் தலைமையில் 24 ஆசிரியர்கள் அடங்கிய பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 116 ஆசிரியர்கள் அடங்கிய நிலையான பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka