ஞாயிறு, 1 மார்ச், 2015

அரசு மானியத்துடன் டிராக்டர்கள் வழங்க ரூ. 30 லட்சம் ஒதுக்கீடு

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிட விவசாயிகளுக்கு டிராக்டர்கள் வேளாண் பொறியியல் துறை சார்பில் வழங்க ரூ. 30 லட்சம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் வே. துரைசாமி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

8 முதல் 20 வரை குதிரை திறனுள்ள டிராக்டர்களுக்கு ரூ. 1 லட்சம், 20 முதல் 70 வரை குதிரை திறனுள்ள டிராக்டர்களுக்கு ரூ. 1.25 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.

திருவாரூர் கோட்ட விவசாயிகள் பவித்திரமாணிக்கத்தில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர்,

மன்னார்குடி கோட்ட விவசாயிகள் மன்னார்குடி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

தேர்வாகும் விவசாயிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் டிராக்டர்களின் மாடல்களில் விரும்பியதை தேர்வு செய்து கொள்ளலாம். அரசு மானியத்துடன் டிராக்டர்களை பெற மானியம் போக மீதமுள்ள தொகைக்கான வரைவோலைகளை விவசாயிகள் தாங்கள் தேர்வு செய்யும் நிறுவனத்தின் பெயரில் எடுக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு பவித் திரமாணிக்கத்தில் உள்ள வேளாண் பொறியியல் துறையை அணுகலாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka