திங்கள், 16 மார்ச், 2015

ஊரக வளர்ச்சி துறையில் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் மதிவாணன் தகவல்


ஊரக வளர்ச்சி துறையில் பணியின்போது இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் மதிவாணன் கூறினார்.

பணி நியமனம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் மதிவாணன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியி ருப்பதாவது:-

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் நிலையாக் கப்பட்ட பணியிடத்தில் பணி புரிந்து இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர்களில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் கல்வி தகுதிக்கு ஏற்றவாறு அதிகபட்சமாக இளநிலை உதவியாளர் நிலையில் பணி நியமனம் வழங்கப்பட்டு வரு கிறது.

கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கு விண் ணப்பம் செய்பவர்கள் 18 வயதில் இருந்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பணியின் போது இறந்தவரின் மனைவி அல்லது கணவர் பணி நியமனம்கோரி விண்ணப்பிக் கும்போது வயது உச்ச வரம்பு 50 ஆகும்.

3 ஆண்டுகளுக்குள்...

அரசு ஊழியர் இறந்த 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் தேதியை கணக்கில் கொண்டு வயது மற்றும் கல்வித்தகுதி பரிசீலிக்கப்படும். பணியின் போது இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர்களில் முதலில் ஒருவருக்கு விண்ணப்பம் செய்துவிட்டு பின்னர் மாற்று வாரிசுதாரருக்கு பணி நிய மனம் கோரி விண்ணப்பிக்க கூடாது. பணியிடையே இறந்த அரசு ஊழியர் பணிபுரிந்த மாவட்டத்தில் காலிப்பணியி டம் இல்லை எனில் அருகில் உள்ள பிற மாவட்டங்களில் பணிபுரிவதற்கு விண்ணப்பிக்க லாம். பிற மாவட்டங்களில் உள்ள காலிப்பணியிடங்களின் அடிப்படையில் விண்ணப்பங் கள் பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka