இணையதள சேவை மையங்களில் வருவாய், சாதி சான்றிதழ்களை எளிதில் பெறலாம் என திருவாரூர் கலெக்டர் மதிவாணன் கூறினார்.
இணையதள சேவை மையம்
திருவாரூர் மாவட்டம் மன் னார்குடி தாலுகா அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் இணையதள சேவை மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு நடைபெறும் சாதி, வருவாய், இருப்பிடம் உள்ளிட்டவை தொடர்பான சான்றிதழ் வழங் குவது தொடர்பான பணி களை கலெக்டர் மதிவாணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வை தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித் தார்.
அப்போது அவர் கூறிய தாவது:-
மக்கள் அரசு அலுவலகங் களை தேடி செல்லும் நிலை மாறி விட்டது. மக்களை தேடி அரசு என்ற நிலையை தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது. அதற்காக இதுபோன்ற இணையதளசேவை மையங் கள் நிறுவப்பட்டுள்ளன. இங்கு வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி என் பதற்கான சான்றிதழ், கணவனால் கைவிடபட்ட பெண் என்பதற்கான சான்றிதழ், முதல்- அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், டாக்டர் முத்துலட்சுமி கலப்பு திருமண நிதி உதவி திட்டம், ஈ.வே.ரா. மணியம்மை நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் நினைவு மறுமண நிதி உதவி திட்டம், அன்னை தெரசா ஆதரவு நிதி உதவி திட்டம் ஆகியவற்றின் கீழ் நிதி உதவி பெறுவதற்கான சான்றிதழ்களை எளிதாக பெறலாம்.
பான் கார்டு
அதேபோல இணையதளம் வாயிலாக மின்கட்டணத்தை செலுத்தும் வசதி, பான் கார்டு பதிவு செய்யும் வசதி, ஆதார் அட்டை பெறுவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள் ளன.
திருவாரூர் மாவட்டத்தில் 7 தாலுகா அலுவலகங்களில் இணையதள சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் இணையதள வசதியுடன் செயல்படும் இத்தகைய இணையதள சேவை மையங்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது மன்னார்குடி உதவி கலெக்டர் செல்வசுரபி, தாசில்தார் ரெங்கசாமி, கேபிள் டி.வி. தனி தாசில்தார் பாலகிருஷ்ணன், செய்தி மக் கள் தொடர்பு அதிகாரி நல்ல தம்பி, உதவி மக்கள் தொடர்பு அதிகாரி கார்த்திகேயன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக