வெள்ளி, 20 மார்ச், 2015

திருவாரூர் மாவட்டத்தில் 19 ஆயிரம் மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதினர்.


திருவாரூர் மாவட்டத்தில் 19 ஆயிரம் மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதினர்.

பொதுத்தேர்வு

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. திருவாரூர் மாவட்டத்தில் 9 ஆயிரத்து 449 மாணவர்கள், 9 ஆயிரத்து 843 மாணவிகள் ஆக மொத்தம் 19 ஆயிரத்து 292 பேர் மற்றும் தனித்தேர்வர்கள் ஆயிரத்து 200 பேர் தேர்வு எழுதினர்.இந்த தேர்வு 57 மையங்களில் நடக்கிறது. இந்த தேர்வு 57 மையங்களில் நடந்தது. இந்நிலையில் திருவாரூரை அடுத்த அம்மையப்பன் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கொரடாச்சேரி அரசு மேல்நிலைபள்ளியில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வை மாவட்ட கலெக்டர் மதிவாணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பறக்கும் படை

திருவாரூர் மாவட்டத்தில் 19 ஆயிரத்து 292 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். மேலும் 1ஆயிரத்து 200 மாணவர்கள் தனித்தேர்வு எழுதினர். தேர்வு மையங்களில் தேவையான குடிநீர், மின்வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் எதிர்பாராதவிதமாக மின்தடை ஏற்பட்டால் அதனை சரி செய்ய ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையத்திற்கு ஒரு பறக்கும் படை வீதம்57 பறக்கும் படைகள், முதன்மைகல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் தலைமையில் 4 சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.மாணவர்கள் அமைதியான முறையில் தேர்வு எழுத அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

ஆய்வின் போது முதன்மை கல்வி அலுவலர் மணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka