கட்டணம் செலுத்தாத வர்களின் குடிநீர்
இணைப்பு துண்டிக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து திருவாரூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) தர்மலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வீட்டு இணைப்பு துண்டிப்பு
திருவாரூர் நகராட்சிக்கு 2014-15-ம் ஆண்டுக்கான 2-வது அரையாண்டு தொடங்கி இம்மாதம் நிறைவு பெறுகிறது. எனவே இதுவரை சிலர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், வர்த்தக நிறுவனங்களுக்கான தொழில்வரி, நகராட்சி கடைகளுக்கான வாடகை உரிமம் ஆகிய இனங்களை செலுத்தாமல் இருந்து வருகின்றனர். நகராட்சி பணியாளர்கள் பலமுறை செலுத்த வலியுறுத்தியும் கேட்பு அறிவிப்புகள், நினைவூட்டு அறிவிப்புகள் அனுப்பப்பட்டும் நிலுவை வரியினங்களை பலர் செலுத்தாமல் உள்ளனர்.
இதுவரை கட்டணம் செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். மேலும் சொத்து வரி, தொழில் வரி செலுத்தாதவர் மீது நகராட்சி மூலம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஒத்துழைப்பு
வரி செலுத்துவோர் வசதிக்காக சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களிலும் அலுவலக கணினி மையம், பஸ் நிலைய கணினி மையம் இயங்கும். தினமும் மாலை 6 மணிவரை கணினி வசூல் மையம் செயல்படும். எனவே இதுவரை வரி செலுத்தாதவர்கள் உடனடியாக வரி செலுத்தி, நகர வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக