உப்பு இல்லாமல் இருக்கலாம், நட்பு இல்லாமல் இருக்க முடியாது என்று கல்லூரி பட்டமளிப்பு விழாவில் துணைவேந்தர் பேசினார்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. முதல்வர் கௌதமன் வரவேற்றார். திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக துணை வேந்தர் முத்துகுமார் மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில்: திருத்துறைப்பூண்டி தாலுகா விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். இந்த பகுதியில் உள்ளவர்கள் உயர்கல்வி பெறுவதற்காக 2011ம் ஆண்டு திருத்துறைப்பூண்டியில் மாதிரி கல்லூரி துவக்கப்பட்டு 4ம் ஆண்டாக நடைபெற்று வருகிறது. மூன்று ஆண்டு படிப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு இன்று பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இன்று உலக சிட்டுகுருவிகள் தினமாகும். உழவன் சேற்றில் கை வைக்கவில்லை என்றால் நாம் சோற்றில் கைவைக்க முடியாது. பட்டமளிப்பு விழா அனைவருக் கும் வாய்ப்பதில்லை. நட்பை பாராட்டும் தினமாகவும் பட்டமளிப்பு விழாவை கருதலாம். உப்பு இல்லாமல் இருந்துவிடலாம். நட்பு இல்லாமல் இருக்க முடியாது. 1913ல் முதல் சர்வதேச மகளிர்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
பெண் கல்விக்கு வித்திட்டவர் சாவித்திரிராவ் நினைவு தினம் மார்ச் 10 ஆகும். இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் யாரு என்று கேட்பதற்குமுன்பே சொல்லி விடுகிறீர்கள். நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியவை பெண்கள் கிரிக்கெட் அணி தலைவி பத்மஸ்ரீ விருது பெற்றவர்.அவர் ராஜஸ்தான் ஜோத்பூர் பகுதியை சேர்ந்த மித்தானிராஜ். உலகின் மிகச் சிறந்த கண்டுப்பிடிப்பு புத்தகமாகும். பெற்ற கல்வி சமுதாயத்திற்கு பயன்பட்டால்தான் கற்ற கல்விக்கு பெருமை என்றார். விழாவில் எம்எல்ஏ உலகநாதன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் சண்முகசுந்தர், நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியகுழு தலைவர் வேதநாயகி சிங்காரவேலு, லயன்ஸ் கிளப் தலைவர் பொறியாளர் கைலாசநாதன், லியோ பொருளாளர் சுரேஷ் மற்றும் விரிவுரையாளர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக