வெள்ளி, 27 மார்ச், 2015

இம்பல்ஸ் ஷாப்பிங்...தேவையில்லாத பொருட்களில் முடங்கும் பணம்!


இந்தக் கட்டுரையைப் படிக்கும்முன் உங்களது வீட்டை முழுமையாக ஒருமுறை சுற்றிப் பாருங்கள். உங்களைச் சுற்றி என்னென்ன பொருட்கள் இருக்கின்றன, இந்தப் பொருட்களை நீங்கள் எதற்காக வாங்கினீர்கள், இதனை எத்தனைமுறை பயன்படுத்தி இருப்பீர்கள், கடைசியாக எப்போது பயன்படுத்தினீர்கள் என்பதைக் கவனியுங்கள். இதனால் உங்கள் வருமானத்தில் பெரும்தொகை தேவையில்லாமல் செலவாகியுள்ளது என்றால் நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா? நீங்கள் ஒப்புக்கொள்ள மறுத்தாலும் அதுதான் உண்மை. எப்படி?



சதீஷ் என்பவர் பிரபல தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர். இவர், தன் வீட்டில் உள்ள பொருட்களை அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும் என நினைப்பவர். இவரது கையில் தற்போது புதிதாகச் சந்தைக்கு வந்த செல்போன் இருக்கும்.

இதேமாதிரி குடும்ப உறுப்பினர்கள் எல்லாரிடமும் லேட்டஸ்ட் செல்போன்கள். இதற்கான மொத்த விலை சுமார் 75,000 ரூபாய். ஏற்கெனவே வாங்கிய போன்கள் எக்ஸ்சேஞ்சில் குறைந்த விலைக்குக் கேட்டதால், விற்காமல்   வீட்டில் கிடக்கின்றன. ஆக மொத்தத்தில், செல்போனுக்காக மட்டும் சதீஷ் மற்றும் அவரது குடும்பம் 1.2 லட்சம் ரூபாயைச் செலவழித்துள்ளது.

செல்போன் மட்டுமல்ல, சதீஷுக்குப் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆசை. இதற்காக உயர்ரக கேமரா ஒன்றை வாங்கினார். புகைப்படம் எடுப்பது பற்றி அவ்வளவாகத் தெரியாத சதீஷ் கேமராவுக் காகச் செலவழித்த தொகை 65,000 ரூபாய்.

 ஆனால், செல்போனில் 12 மெகாபிக்ஸல் கேமரா வாங்கியதால், அதில்தான் புகைப்படம் எடுக்கிறார். எனவே, உயர்ரக கேமரா மூன்று மாதங்களாகப் புகைப்படம் எதுவும் எடுக்கப்படாமல் அப்படியே தூசி படிந்துகிடக்கிறது.

அவரது மகன் கல்லூரியில் நுழைந்தவுடன் பைக் ஒன்றை வாங்கித் தந்தார் சதீஷ். ஆனால், அவனோ வெளியூரில் படிப்பதால் கடந்த பத்து மாதங்களாக அப்படியே நிற்கிறது அந்த பைக். அதற்காகச் செலவழித்த தொகை 80,000 ரூபாய். வீட்டில் ஏற்கெனவே கம்பெனி கொடுத்த லேப்டாப் உள்ளது. இருந்தாலும், அலுவலக வேலைகளுடன் பெர்சனல் வேலைகள் கலக்கக் கூடாது என அவரும் அவரது மனைவியும் தனித் தனியே வாங்கிய லேப்டாப்பின் விலை 1,20,000.


இதேபோல் பல விஷயங்களிலும் இம்பல்ஸிவாகப் பொருட்களை வாங்கிக் குவித்துள்ளார் சதீஷ். ஆனால், அது குறிப்பிட்ட காலத்துக்குமேல் பயனில்லாமல் வீட்டில் காட்சிப்பொருளாக மாறியிருக்கிறது.

இவர்தான் இப்படி வாங்கிக் குவித்துள்ளார் என்றால், இவரது மனைவி ஆஃபரில் வந்தது என்று ஒரு மைக்ரோவேவ் ஓவன் வாங்கி அதனைச் சில நாட்கள் மட்டும் பயன்படுத்திவிட்டு அப்படியே ஒரு மூலையில் வைத்திருக்கிறார்.

 நன்றாக ஓடிக் கொண்டிருந்த ஃப்ரிட்ஜை தொலைக்காட்சி விளம்பரத்தில் புதிய டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது என்று மாற்றி அந்த ஃப்ரிட்ஜும் ஏற்கெனவே தந்த பயன்பாட்டையே தந்துள்ளது. வீட்டில் உள்ள குப்பைகளை அகற்ற வாக்வம் க்ளீனர் வாங்கி, அதுவும் பயன்பாடு இல்லாமல் இருக்கிறது. அதுமட்டுமின்றி, வீட்டில் குப்பைகளை அகற்ற வேலையாளை நியமித்து மாதந்தோறும் சம்பளமும் தந்துகொண்டிருக்கிறார். இதனையெல்லாம் கூட்டிக்கழித்துப் பார்த்தால், இரண்டு வருடங்களில் நம்மைச் சுற்றி நமக்கே தெரியாமல் நான்கு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேங்கிக்கிடப்பதைப் பார்க்கலாம்.

அதற்காக அப்டேட் ஆகாமல் இருக்க முடியுமா என்று கேட்கலாம். அப்டேட்டாக இருப்பதில் எந்தத் தவறும் இல்லை. கேமரா சொல்போன் வாங்கிய பிறகு, கேமராவும், மியூசிக் ப்ளேயரும் தேவையில்லாத செலவுகள்தானே! அதேபோல், வீட்டில் அனைவரும் பயணிக்கும் கார் இருக்கும் போது, தனியே இருவருக்கு பைக் தேவையில்லை அல்லவா! நமது பயன்பாட்டுக்கு ஏற்ற செல்போன் இருக்கும்போது அப்டேட்டடு போன் வேண்டும் என்பது செலவை நீட்டும் விஷயமாகும். வீட்டில் அனைவருக்குமே அலுவலக லேப்டாப் உள்ளபோது வீட்டில் பொதுவாக பெர்சனல் வேலைகளுக்கு ஒரு கம்ப்யூட்டர் போதும் என்று நினைத்தாலே போதும், செலவு குறையும்.

உங்களிடம் உள்ள பொருட்களை ஒரு விடுமுறைநாளில் பட்டியலிடுங்கள். அதற்காக நீங்கள் செல்வழித்த தொகையைப் பாருங்கள். அதனைத் தற்போது விற்றால் எவ்வளவு கிடைக்கும் என்று பாருங்கள். உங்கள் முதலீட்டில் 50% கூட உங்களுக்குத் திரும்பக் கிடைக்காது. அதனால் இப்போதிலிருந்து நீங்கள் வாங்கும் பொருளை வாங்குவதற்கு முன்பு ஒரு நிமிடம் யோசியுங்கள். இது அவசியமா, இல்லை இந்தப் பொருள் சந்தையில் பிரபலமாக உள்ளதே என்று வாங்காமல் தேவைப்பட்டால் மட்டும் வாங்குங்கள்.



உதாரணமாக, மேற்கண்ட அட்டவணையை கவனியுங்கள். இதில் ஒரு 1 லட்சம் ரூபாய் பொருட்கள் ஓரளவுக்குப் பயனளிக்கின்றன எனில், மீதமுள்ள 3 லட்சம் ரூபாயை நீங்கள் செலவழித்துள் ளீர்கள். இந்தத் தொகையை 8% வருமானம் தரும் ஒரு வங்கி முதலீட்டில் முதலீடு செய்திருந்தால், இரண்டு ஆண்டுகளில் உங்களால் ஏறக்குறைய 50,000 ரூபாயை வருமானமாகப் பெற்றிருக்க முடியும். இது உங்கள் மகனின் ஒரு செமஸ்டர் கட்டணமாகவோ அல்லது உங்களது ஆறு மாத மளிகைப் பொருட்களுக்கான செலவையோ ஈடுகட்டி இருக்கும்.

தேவையில்லாத செலவைக் குறைத்தால், தேவையில்லாத பொருட்கள் நீங்கி உங்களுக்குத் தேவைப்படும் பணம் உங்களிடம் நிறைய இருக்கும்.

படம்: தே.தீட்ஷித்.

ச.ஸ்ரீராம்

திங்கள், 23 மார்ச், 2015

என் ஊர் - திருத்துறைப்பூண்டி

அரசியல் விமர்சகரான வீரபாண்டியன் தன் ஊரான திருத்துறைப்பூண்டிபற்றி இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

 'திருத்துறைப்பூண்டி... என்னுடைய நாற்றங்கால்! இந்த இடத்துல நாற்றங்கால்ங்கிற வார்த்தைதான் ரொம்பப் பொருத்தம்னு நெனைக்கிறேன். ஏன்னா, திரும்பின பக்கம் எல்லாம் வயல்கள்தான். வேற தொழிற்சாலை களோ, கல்லூரிகளோ இல்லாத பழமையான ஊர். ஊரையே ரெண்டா வகுந்துகிட்டு ஓடுற முள்ளியாறுதான் இந்த ஊருக்குத் தாய்ப்பால். வெயில் காலத்தில நாங்க பந்து விளையாடுறதும் கபடிப் போட்டி நடத்துறதும் இங்கதான். ஆத்துல தண்ணி வந்தா விவசாயிகளுக்குக் கொண் டாட்டம். ஆடிப் பெருக்குக்கு வெத்தலைல சூடம் கொளுத்தி வெச்சி காவிரி ஆத்தாளைக் கும்பிடுவோம்.

அதெல்லாம் 'பழைய கதை’. இப்ப அந்த முள்ளியாத்தைப் பாத்தா வயித்தெரிச்சலா இருக்கு. அகண்டு ஓடின ஆறு, இப்ப ஊர் கழிவு களைச் சுமக்கிற கால்வாயா குறுகிக்கெடக்கு. ரெண்டு கரையிலயும் வீடுகள்.

 

'ஆற்றங்கரை நாகரிகம்’னு சொல்வாங்களே அது எனக்கு ரொம்பப் பொருந்தும். நாங்க காலாற நடந்து கவிதை எழுதினது... பாட்டு படிச்சது... நாடகம் போட்டது... எல்லாம் இந்த ஆற்றங்கரையிலதான். இங்கதான் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் சீனிவாச ராவின் சமாதி இருக்கு. சுதந்திரப் போராட்டக் காலத்துல ராஜாஜி தலைமையில நடந்த வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்துக்கு எங்க ஊர் வழியா போகும்போது, 'தியாகிகளுக்குச் சாப்பாடு கொடுக்கக் கூடாது; தங்க இடம் கொடுக்கக் கூடாது’னு வெள்ளக்கார போலீஸ் உத்தரவு போட்டுச்சு. எங்க ஊர் ஜனங்க, போலீஸுக்குத் தெரியாம சோத்துப் பொட்டலங்களை மரத் துக்கு மரம் கட்டித் தொங்கவிட்டாங்க. ராஜாஜி, 'மரத்துல காய் காய்க்கிறதத்தான் பாத் திருக்கோம்; இங்கதான் சோறு காய்க்கிற

அதிசயத்தைப் பார்க்கிறோம்’னு சொல்லி பாராட்டினாராம். இந்த ஏற்பாட்ட முன்ன நின்னு செஞ்சவங்கள்ல எங்க அப்பா, தியாகி திருநாவுக்கரசுவும் ஒருத்தர்.

இன்னிக்கு நான் நூற்றுக்கணக்கான தலைவர்கள், அறிஞர்களை 'நேருக்கு நேர்’ நிகழ்ச்சியில் சந்திச்சிக்கிட்டு வர்றேன். இதுக்கெல்லாம் அடிப்படை எங்க வீடுதான். எங்க வீட்டுத் திண்ணையில, தமிழ்நாட்டின் பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் அப்பாவோட வாதம் பண்ணினதைக் கிட்ட இருந்து கேட்டு இருக்கேன். பெருந்தலைவர் காமராஜர், ஜீவா, கக்கன், பக்தவத்சலம், சி.சுப்பிரமணியம், கே.டி.கே.தங்கமணி, சர்தார் வேதரத்தினம் பிள்ளை, பட்டுக்கோட்டை நாடிமுத்துப் பிள்ளை, மணலி கந்தசாமி, மன்னை நாராயணசாமி, பூண்டி வாண்டையார், ஐயா மூப்பனார் போன்றவங்க எல்லாம் எங்க வீட்டுக்கு அடிக்கடி வருவாங்க.



இன்னிக்குத் தமிழ்நாட்டுல பரபரப்பாப் பேசப்படுற சசிகலா என்னுடைய பள்ளிக்கூடத் தோழி. அவர் எனக்கு ரெண்டு வருஷம் ஜூனியர். திவாகரன் ரொம்ப ரொம்ப ஜூனியர். நாங்க எல்லாரும் ஒண்ணாச் சேர்ந்துதான் ஸ்கூலுக்குப் போவோம்.

ஊருக்கு நடுவில் இருக்கிற திருக்குளத்துக் கரையில், மேட்டுத் தெருவுலதான் ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் வீடு. அது பழைய ஓட்டு வீடு. ரொம்ப நாள் அப்படியேதான் கிடந்தது. சென்னைக்கு வந்து பெரிய ஆளா ஆன பிறகு, 'திருத்துறைப்பூண்டி’னு யார் சொன்னாலும், சாப்பிட வைக்காம அனுப்ப மாட்டாராம் வாசன். கலைஞரின் இளமைக் காலம் ரொம்ப நாள் திருத்துறைப்பூண்டியில கழிஞ்சிருக்கு. எங்க ஊர்ல இருந்து திருக்குவளை 10 கிலோ மீட்டர்தான்.



அப்பப்போ நேரம் கிடைக்கிறப்போ ஊருக்குப் போய்க்கிட்டுத்தான் இருக்கேன். எனக்கு அறிவுப் பால் ஊட்டின தாய் மண்ணு அங்க இருக்கு;  பாக்கணுமில்லியா?"

                                                                                                                           Thks
                                                                                                                         Vikatan.

மனுநீதி நாள் முகாமில் 22 பேருக்கு கல்வி உதவி

Image result for மனுநீதி நாள் முகாம்திருத்துறைப்பூண்டி, : திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். தாசில்தார் மதியழகன் வரவேற்றார். முகாமில் 22 பேருக்கு கல்வி உதவித்தொகை, 4 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை, 22 பேருக்கு புதிய குடும்ப அட்டை, புதுவாழ்வு திட்டத்தின்கீழ் 2 பேருக்கு தனிநபர் கடன், 4 பேருக்கு தையல் இயந்திரம், வேளாண்மைத்துறை சார்பில் 4 பேருக்கு வேளாண் கருவிகள், தோட்டக்கலை சார்பில் 5 பேருக்கு மரக்கன்று வழங்கப்பட்டது. ஆர்டிஓ செல்வசுரபி, மாவட்ட வழங்கல் அலுவலர் மனோகரன், ஆதிதிராவிட நல அலு வலர் அசோகன், ஒன்றியக்குழு தலைவர் வேதநாயகி சிங்காரவேலு மற்றும் பலர் பங்கேற்றனர்.

சனி, 21 மார்ச், 2015

உப்பு இல்லாமல் இருக்கலாம் நட்பு இல்லாமல் இருக்க முடியாது பட்டமளிப்பு விழாவில் துணைவேந்தர் பேச்சு


உப்பு இல்லாமல் இருக்கலாம், நட்பு இல்லாமல் இருக்க முடியாது என்று கல்லூரி பட்டமளிப்பு விழாவில் துணைவேந்தர் பேசினார்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. முதல்வர் கௌதமன் வரவேற்றார். திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக துணை வேந்தர் முத்துகுமார் மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில்: திருத்துறைப்பூண்டி தாலுகா விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். இந்த பகுதியில் உள்ளவர்கள் உயர்கல்வி பெறுவதற்காக 2011ம் ஆண்டு திருத்துறைப்பூண்டியில் மாதிரி கல்லூரி துவக்கப்பட்டு 4ம் ஆண்டாக நடைபெற்று வருகிறது. மூன்று ஆண்டு படிப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு இன்று பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இன்று உலக சிட்டுகுருவிகள் தினமாகும். உழவன் சேற்றில் கை வைக்கவில்லை என்றால் நாம் சோற்றில் கைவைக்க முடியாது. பட்டமளிப்பு விழா அனைவருக் கும் வாய்ப்பதில்லை. நட்பை பாராட்டும் தினமாகவும் பட்டமளிப்பு விழாவை கருதலாம். உப்பு இல்லாமல் இருந்துவிடலாம். நட்பு இல்லாமல் இருக்க முடியாது. 1913ல் முதல் சர்வதேச மகளிர்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

பெண் கல்விக்கு வித்திட்டவர் சாவித்திரிராவ் நினைவு தினம் மார்ச் 10 ஆகும்.  இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் யாரு என்று கேட்பதற்குமுன்பே சொல்லி விடுகிறீர்கள். நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியவை பெண்கள் கிரிக்கெட் அணி தலைவி பத்மஸ்ரீ விருது பெற்றவர்.அவர் ராஜஸ்தான் ஜோத்பூர் பகுதியை சேர்ந்த மித்தானிராஜ். உலகின் மிகச் சிறந்த கண்டுப்பிடிப்பு புத்தகமாகும்.  பெற்ற கல்வி சமுதாயத்திற்கு பயன்பட்டால்தான் கற்ற கல்விக்கு பெருமை என்றார். விழாவில் எம்எல்ஏ உலகநாதன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் சண்முகசுந்தர், நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியகுழு தலைவர் வேதநாயகி சிங்காரவேலு, லயன்ஸ் கிளப் தலைவர் பொறியாளர் கைலாசநாதன், லியோ பொருளாளர் சுரேஷ் மற்றும் விரிவுரையாளர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ரத்த தான முகாம்


கடந்த பிப்ரவரி 18ம் தேதி முதல் கிறிஸ்தவர்கள் தவக்கால விரதம் இருந்து வருகிறார்கள். தினந்தோறும் திருப்பலி, வெள்ளிதோறும் சிலுவைபாதை ஆகியவற்றில் பங்கேற்கின்றனர். இந்நிலையில் திருத்துறைப்பூண்டி லூர்து மஹாலில் ரத்ததான முகாம்  நடைபெற்றது. பங்குதந்தை சவரிமுத்து தலைமை வகித்தார். உதவி பங்குதந்தை மார்ட்டின் சூசைராஜ் முன்னிலை வகித்தார். திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவகுழுவினர்  37 பேரிடம் ரத்தம் சேகரித்தனர். முகாமில் சமூக தலைவர் ஆரோக்கியசாமி, பங்குமன்ற செயலாளர் ஏசிபி.தாஸ், துணை தலைவர் ஏவிடி. தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ரெயில்வே பட்ஜெட்டில் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் முடிவு


பட்ஜெட்டில் கோரிக்கை கள் நிராகரிக்கப்பட் டதை கண்டித்து போராட்டம் நடத்த ரெயில்வே ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

கோரிக்கைகள் நிராகரிப்பு

ரெயில்வே ஒப்பந்த தொழி லாளர் சங்க அகில இந்திய கூட்டமைப்பின் துணை செய லாளரும், ரெயில்வே ஒப்பந்த தொழிலாளர் சங்க மாநில தலைவருமான மனோகரன் நீடாமங்கலத்தில் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறிய தாவது:-

ரெயில்வேயில் சுமை தூக் கும் தொழிலாளர்களுக்கு ரெயிலில் பயணம் செய்ய இலவச பாஸ் வழங்குவதை போல், ரெயில்வேயில் பணி யாற்றும் ஒப்பந்த தொழிலாளர் களுக்கும் இலவச பாஸ் வழங்க வேண்டும். ரெயில்வேயில் குரூப் டி வேலை வாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ரெயில்வே துறை நிர்ணயித்த தினக் கூலியை ரெயில்வேயில் துப் புரவு தொழிலாளர்களுக்கு ஒப்பந்தக்காரர்கள் முறையாக வழங்க வேண்டும். மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தை ரெயில்வே ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் அமல் படுத்த வேண்டும். இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை ரெயில்வே ஒப்பந்த தொழி லா ளர்கள் வலியுறுத்தி வந்தோம். இதுதொடர்பாக ரெயில்வே மந்திரியிடம் பட்ஜெட் தாக் கல் செய்யப்படுவதற்கு முன்பு மனு அளிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டிற்கான ரெயில்வே பட்ஜெட்டில் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட் டுள்ளன.

போராட்டம்

கோரிக்கைகள் நிராகரிக்கப் பட்டதால் இந்திய ரெயில்வே யில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை கண் டித்தும், அனைத்து கோரிக்கை களையும் உடனே நிறைவேற்ற கோரியும் போராட்டம் நடத்த ஒப்பந்த தொழிலாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அகில இந்திய கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் வருகிற 25-ந் தேதி நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறி னார்.

கோட்டூர் பகுதியில் 27 ஆயிரம் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி


கோட்டூர் பகுதியில் 27 ஆயிரம் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

திருவாரூர் மாவட்ட கால் நடை பராமரிப்பு துறை சார் பில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்று வருகிறது. கோட்டூர் ஒன்றி யத்தில் 49 ஊராட்சிகளிலும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் முகாம் 8-வது கட்டமாக நடைபெற்றது.

கோட்டூர் ஒன்றியம் முழு வதும் உள்ள பல்வேறு கிரா மங்களில் நடைபெற்ற முகாம் களை திருவாரூர் மண்டல இணை இயக்குனர் டேவிட், மன்னார்குடி கோட்ட உதவி இயக்குனர் லூர்துசாமி ஆகி யோர் ஆய்வு செய்தனர். இதில் கருப்புகிளார் நடை பெற்ற முகாமை இணை இயக் குனர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் மாடு களுக்கு தடுப்பூசி போட் டார்.

27 ஆயிரம் மாடுகள்

முகாமையொட்டி கால் நடை டாக்டர்கள் குமரேசன், செந்தில்குமார், ராஜன், பிர வீன், பிருந்தா, வித்யா ஆகி யோர் தலைமையிலான 6 மருத்துவ குழுவினர் நியமிக் கப்பட்டு இருந்தனர். இவர்கள் கிராமம் கிராமமாக சென்று, 27 ஆயிரத்து 941 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டனர்.

விவசாயிகள் பலன் அடைய “உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்” உதவும் கலெக்டர் மதிவாணன் தகவல்


விளை பொருட்களை நேரடியாக விற்க வாய்ப்பு இருப்பதால் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் விவசாயி கள் பலன் அடைய உத வும் என கலெக்டர் மதி வாணன் கூறினார்.

கருத்தரங்கம்

திருவாரூர் மாவட்டம் நீடா மங்கலம் வேளாண்மை அறி வியல் நிலையத்தில் வேளாண்மை விற்பனை மற் றும் வேளாண் வணிகத்துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அமைத்தல் திட்டம் தொடர்பான கருத்த ரங்கம் நடந்தது. மாவட்ட கலெக்டர் மதிவாணன் கருத் தரங்கை தொடங்கி வைத்து பேசினார்.அப்போது அவர் கூறிய தாவது:-

விவசாயிகளை அடிப்படை உறுப்பினர் மற்றும் பங்கு தாரர்¢களாக கொண்டு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங் களை உருவாக்க அரசு திட்ட மிட்டுள்ளது. இந்த திட் டத்தால் வேளாண்மை உற் பத்தியை பெருக்கவும், விளை பொருட்களின் தரத்தை உயர்த்தவும் முடியும். இந்த திட்டத்தின் மூலம் தங்கள் விளைபொருட்களை விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்ய வாய்ப்புகள் உள்ளன. எனவே விவசாயிகள் அதிக பலன் அடைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உதவும்.

வேளாண் உற்பத்தியாளர் களை வலுப்படுத்துதல், சந்தை யில் வேளாண்மை பொருட் களுக்கு அதிக விலை கிடைத் தல், வணிகத்தில் விவசாயி களின் ஆதிக்கத்தை நிலை நிறுத்துதல் ஆகியவை இத் திட்டத்தின் முக்கிய நோக்கங் கள்.

இன்றைய நிலை

அதிக விளைச்சல் காணும் விவசாயிகளுக்கு கூட விளை பொருட்களை சந்தையில் விற்கும்போது உரிய விலை கிடைப்பது இல்லை. இதுதான் இன்றைய நிலை. ஆனால் உழவர் உற்பத்தியாளர் நிறு வனம் அமைத்தல் திட்டத்தின் மூலம் நேரடியாக விளை பொருட்களை விற்பதால் நுகர்வோர் கொடுக்கும் விலை யில் 60 சதவீதம் விவசாயி களுக்கே கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.

தனி விவசாயி ஒருவரால் சந்தை பற்றிய விவரங்களை அறிந்து கொள்வது சிரமம். எனவே விவசாயிகள் ஒரு குழு வாக இணைந்து செயல்படும் வகையில் இந்த திட்டம் உரு வாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விலை நிர்ணயம் செய் யும் உரிமையை பெற முடியும். பொருட்களை மதிப்பு கூட்டி விற்க முடியும். உயர் தொழில் நுட்பங்களை உரிய நேரத்தில் கற்று கொள்ளவும், வங்கி கடனை பெறவும் முடியும்.

மத்திய அரசின் பங்கு தொகை

இதை உணர்ந்துதான் தமி ழக அரசு வேளாண்மை சந்தை தகவல் மற்றும் வணிக மேம் பாட்டு மையத்தை திருச்சியில் அமைத்துள்ளது. மத்திய அரசு உழவர் உற்பத்தியாளர் நிறு வனங்களுக்காக கொள்கை விதிகளை வகுத்து விவசாயி களுக்கு உதவ முன் வந்துள்ளது. சிறு விவசாயிகள் வேளாண் வணிக கூட்டமைப்பு மூலம் 1000 உழவர்களை பங்குதாரர் களாக கொண்டு, ஒரு ஆண்டு காலத்திற்கு மேல் சிறப்பாக செயல்பட்டு வரும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங் களுக்கு ரூ.10 லட்சம் வரை பங்கு தொகை அளிக்க மத்திய அரசு முன்வந்துள்ளது.

இவ்வாறு கலெக்டர் பேசி னார்.

வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் சோழன், வேளாண்மை வணிக துறை துணை இயக்குனர் மனோ கரன், மாவட்ட வளர்ச்சி மேலாளர் ரவிசங்கர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியநாராயணன், தமிழ்நாடு காவிரி டெல்டா விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் ரெங்கநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

காவிரி டெல்டாவில் மீத்தேன் திட்டம் ரத்து? : மத்திய அரசு முடிவு

திருவாரூர்: காவிரி டெல்டாவில் மீத்தேன் எடுக்க தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து இந்த திட்டத்தையே கைவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை மையப்படுத்தி சுமார் 766 சதுரகிமீ பரப்பளவிற்கு  நிலக்கரி படிமத்தின் மீது  மீத்தேன் வாயு படர்ந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை  வணிக ரீதியாக எடுத்து விற்பனை செய்வதற்காக அரியானா மாநிலத்தை சேர்ந்த கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி என்ற தனியார் நிறுவனத்திற்கு மத்திய அரசு கடந்த 2010ம் ஆண்டும்  டெண்டர் வழங்கியது. இத்திட்டம்  செயல்படுத்தப்பட்டால்  விவசாயத்தொழிலை அடிப்படையாக கொண்டுள்ள திருவாரூர், தஞ்சை விளைநிலங்கள் தண்ணீரின்றி பாதிக்கப்படும். குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் என விவசாயிகளும், பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் இத்திட்டத்தை எதிர்த்து  உயர்நீதிமன்றத்தில் விவசாயிகள் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து  தமிழக அரசு இத்திட்டத்திற்கு இடைக்கால தடைவிதித்தது.  இந்நிலையில் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில்  உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு எழுத்துபூர்வமாக பதிலளிக்கையில், மீத்தேன் திட்டத்திற்கு உரிமம் பெற்றுள்ள நிறுவனம்  குறைந்தபட்ச பணியை கூட தொடங்கவில்லை. மத்திய அரசு கேட்ட சில ஆவணங்களையும், வங்கி உத்தரவாதம் உள்ளிட்டவற்றையும் ஒப்படைக்கவில்லை. கான்டிராக்ட் விதிமுறைகளை மீறியதால்  கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்யும் என்று கூறியுள்ளார். 

இது  மீத்தேன் திட்டத்தை கைவிடும் நடவடிக்கையின் முதல் கட்டம் என்று கூறப்படுகிறது. விரைவில் மீத்தேன் திட்டம் ரத்து என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது குறித்து அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பிஆர்.பாண்டியன் கூறும்போது, Òதமிழகத்தில் உள்ள  அரசியல் கட்சிகள் அனைத்தும் கடந்த ஜனவரி 28ம் தேதியன்று விவசாயிகள் நடத்திய  ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கையெழுத்திட்டு  மத்திய அரசுக்கு விடுத்த கோரிக்கைக்கு பலன்கிடைத்துள்ளது. விரைவில் மீத்தேன் திட்டம் ரத்து என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும்Ó என்றார். மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு  நிர்வாகி டாக்டர் பாரதிச்செல்வன் கூறுகையில், Òஅரசாங்கம் இனி காவிரி படுகையில் மீத்தேன்திட்டம் செயல்படுத்தமாட்டோம் என்று அறிவிக்கவேண்டும்Ó என்றார்.

விவசாயிகளுக்கு பாதிப்பு? : மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை:

திருவாரூரில் நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தஞ்சை டெல்டா மாவட்டத்தை பொறுத்தவரை இன்னொரு பிரச்னை மீத்தேன் வாயு பிரச்னை.  இதற்கு அனுமதி அளிக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளது. எந்த ஒரு நிறுவனமும் தொழில் தொடங்க வரும்போது மாநில அரசுடன் முதலில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும்.அதன் பிறகு அந்த நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி பெறவேண்டும். அந்த பகுதி மக்களின் கூட்டத்தை கூட்டி கருத்தறிய வேண்டும்.  இவை எல்லாம் நடந்தால் தான் அங்கு தொழில் தொடங்க முடியும்.  இவை நடக்கும் முன் இப்போது ஆட்சி மாறி அதிமுக ஆட்சிக்கு வந்து விட்டது. மீத்தேன் திட்டத்தின் மூலம் விவசாய நிலத்திற்கு  பாதிப்பு வந்தால் திமுக பார்த்துக்கொண்டிருக்காது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

வெள்ளி, 20 மார்ச், 2015

தாலியை கழற்றி வைத்து விட்டு திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் மாயம்


திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் புதுத்தெரு பாலு மகன் யுவராஜ் (34) இவருக்கும் திருபுவனம் கோவிந்தராஜன் மகள் மல்லிகா (27) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 11–ந்தேதி திருமணம் நடந்தது. 

மல்லிகா கணவனோடு ஒரு மாதமாக குடும்பம் நடத்தி வந்தார். கணவர் வீட்டில் மல்லிகா தனது மாங்கல்யத்தை கழற்றி வைத்து விட்டு மாயமாகி விட்டார். பல இடங்களில் தேடியும் காணவில்லை. 

இதனால் கணவர் யுவராஜ் வலங்கைமான் காவல் நிலையத்தில் மல்லிகாவை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மனுநீதி நாள் முகாம்


திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். தாசில்தார் மதியழகன் வரவேற்றார். முகாமில் 22 பேருக்கு கல்வி உதவித்தொகை, 4 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை, 22 பேருக்கு புதிய குடும்ப அட்டை, புதுவாழ்வு திட்டத்தின்கீழ் 2 பேருக்கு தனிநபர் கடன், 4 பேருக்கு தையல் இயந்திரம், வேளாண்மைத்துறை சார்பில் 4 பேருக்கு வேளாண் கருவிகள், தோட்டக்கலை சார்பில் 5 பேருக்கு மரக்கன்று வழங்கப்பட்டது. ஆர்டிஓ செல்வசுரபி, மாவட்ட வழங்கல் அலுவலர் மனோகரன், ஆதிதிராவிட நல அலு வலர் அசோகன், ஒன்றியக்குழு தலைவர் வேதநாயகி சிங்காரவேலு மற்றும் பலர் பங்கேற்றனர்.

திருத்துறைப்பூண்டியில் குடிநீர் விழிப்புணர்வு பேரணி


தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் திருத்துறைப்பூண்டியில் தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு வாரம் நேற்றுமுன்தினம் துவங்கி வரும் 28ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதையொட்டி விழிப்புணர்வு பேரணி திருத்துறைப்பூண்டி சன்னதி தெருவில் நடைபெற்றது. குடிநீர் வாரிய நிர்வாக பொறியாளர் வசந்தகுமார் தலைமை வகித்தார். உதவி நிர்வாக பொறியாளர் சித்தார்த்தன் வரவேற்றார்.  ஒன்றியகுழு தலைவர் வேதநாயகி சிங்காரவேலு, நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரி பேரணியை துவக்கி வைத்தனர். பேரணி சன்னதி தெருவில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக புதிய பஸ் நிலையம் வரை சென்றது. நகராட்சி ஆணை யர் குருசாமி, பொறியாளர் ராஜகோபால் மற்றும் மகளிர் சுயஉதவிகுழுவினர் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை அடுத்த குத்தாலம் ஊராட்சியில் குடிநீர் பாதுகாப்பு மற்றும் பரிசோதனை பயிற்சி முகாம் நடைபெற்றது.  ஒன்றியகுழுத்தலைவர் தமிழரசன் துவக்கி வைத்தார். உதவி பொறியாளர் பழனி வேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  நகராட்சி அலுவலகத்தில் புறப்பட்ட பேரணியை சப்கலெக்டர்  துவக்கி வைத்தார்.  நகர்மன்ற தலைவர் பவானிசீனிவாசன்,  ஆணையர் ஜெக தீசன், தாசில்தார் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இதில் தனியார் நர்சிங் பயிற்சி பள்ளி மாணவிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்துகொண்டனர்.  

வேதாரண்யத்தில் தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு வாரத்தையெட்டி பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  ராஜாஜி பூங்காவிலிருந்து துவங்கிய பேரணியை எம்எல்ஏ காமராஜ்  துவக்கி வைத்தார். ஊராட்சி ஒன்றிய தலைவர் சுசீலாதேவிசரவணன்,வழக்கறிஞர் நமசிவாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணி மேலவீதி, வடக்குவீதி வழியாக நகராட்சி அலுவலகத்தை அடைந்தது. நீரின் அவசியம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. 

மன்னார்குடியில் குடிநீர் விழிப்புணர்வு பேரணியை நகர்மன்ற தலைவர் சுதாஅன்புசெல்வன், ஒன்றியக்குழு தலைவர் உதயகுமாரி, துணைத்தலைவர் தமிழ்செல்வன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். வட் டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், உதவி தொடக்க கல்வி அலுவலர் புகழேந்தி, தமிழ்நாடு குடிநீர்வாடிகால் வாரிய உதவி பொறியாளர் தமிழரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருத்துறைப்பூண்டி, : திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கொக்கலாடி கிராமத்தில் கோதண்டபாணியின் மகன் பாலமுருகன் வீடு சில நாட்களுக்கு முன்பு தீப் பிடித்து எரிந்து நாசமானது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு லயன்ஸ் சங்கம் சார்பில் தலைவர் பொறியாளர் கைலாசநாதன் தலைமையில் ரூ.5000 மதிப்பிலான ஆடைகள் வழங்கப்பட்டது. விழாவில் முன்னாள் தலைவர்கள் ஏஆர்வி ரவி, சேஷாசலம், பொருளாளர் ராஜேந்திரன், சீமாட்டி ஹஸ்ஸன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு


 வேதாரண்யம் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பவர் லதா. நாகை நீதிமன்றத்தில் முதலாவது மற்றும் இரண்டாவது கோர்ட்டிலும் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை கோர்ட் பணி முடிந்து வேதாரண்யத்துக்கு காரில் வந்தபோது கீழையூர் ஒன்றியம் பிரதாபராமபுரம் என்ற இடத்தில் மர்மநபர்கள் தாக்கினர். இதில் நீதிபதியும் அவரது கார் டிரைவரும் காயமடைந்தனர். இதை கண்டித்தும், திருத்துறைப்பூண்டி கோர்ட் முன் வேகத்தடை அமைக்கக்கோரி நெடுஞ்சாலைத்துறைக்கு பலமுறை கடிதம் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்காதததை கண்டித்தும் திருத்துறைப்பூண்டி வக்கீல்கள் சங்கம் சார்பில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வக்கீல்கள் சங்க தலைவர் அருள்செல்வன் தலைமை வகித்தார். செயலாளர் ரஜினி முன்னிலை வகித் தார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண் டனர்.

டிராக்டரிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு


திருத்துறைப்பூண்டி அருகே டிராக்டரிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள வேளூர் சிவன்கோவில் தெருவைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி கனி (50). இவர் கடந்த வாரம் அதே ஊரைச் சேர்ந்த விஜயன் என்பவரது வயலில் இருந்த வைக்கோலை டிராக்டரில் ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது, டிராக்டரின் மேல்பகுதியிலிருந்து கனி தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.
இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க புகார் பெட்டிகள் திருவாரூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் பேட்டி


பொதுமக்கள் குறை களை தெரிவிக்க புகார் பெட்டிகள் வைக்கப்பட் டுள்ளதாக திருவாரூர் மருத்துவக்கல்லூரி முதல் வர் மீனாட்சிசுந்தரம் கூறி னார்.

புகார் பெட்டிகள்

திருவாரூர் மருத்துவக்கல் லூரி மருத்துவமனையில் செய்ய வேண்டிய வசதிகள் குறித்து ஆலோசனை தெரிவிக்கவும், வசதிகளில் உள்ள குறைபாடுகள் குறித்து புகார் தெரிவிக்க வசதியாக 3 இடங்களில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் நவீன மருத்துவ கருவிகளும் புதிதாக பொருத்தப்பட் டுள்ளன.

இது தொடர்பாக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்து வமனை முதல்வர் மீனாட்சி சுந்தரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறிய தாவது:-

திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் அனைத் தும் முழுவீச்சில் நிறைவேற் றப்பட்டு வருகின்றன. மருத்து வமனையை எந்நேரமும் தூய்மையாக வைத்திருக்கும் வகையில் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. அவசர சிகிச்சைகளுக்கு உடனுக்குடன் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலேயே மருத் துவம் பார்க்கப்படுகிறது.

அறுவை சிகிச்சைகள்

கடந்த மாதம் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு திருவாரூர் மருத்துவமனையிலேயே டாக்டர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்தார்கள். அதேபோல ரத்தம் தொடர்பான நோய் களால் பாதிக்கப்பட்டிருந்த 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு நல்ல முறையில் பிரசவம் பார்க்கப் பட்டது. தனியார் மருத்துவ மனையில் ரூ.3½ லட்சம் செலவு பிடிக்கும் இந்த சிகிச்சை இலவசமாக மருத் துவக்கல்லூரியில் பார்க்கப் பட்டது. உயர்ந்த தரத்தில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் அனைத்து வசதி களும் தயார் நிலையில் உள்ளன.

நவீன கருவிகள்

நவீன இ.சி.ஜி., செயற்கை சுவாச கருவிகள், உயிர் காக்கும் மருந்துகள் அடங்கிய கருவிகள், ரத்த அழுத்தம், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு கண்டு பிடிக்கும் கருவி, காது அகநோக்கி உள்ளிட்ட கருவிகள் மருத்துவமனையில் பொருத் தப்பட்டுள்ளன.

மருத்துவமனையில் உள்ள குறைபாடுகளை பொதுமக்கள் எழுத்து மூலமாக தெரிவிப் பதற்கு வசதியாக நுழைவாயில், முதல்வர் அலுவலகம், புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு ஆகிய இடங்களில் புகார் பெட்டிகள் புதிதாக வைக்கப் பட்டுள்ளன. இந்த புகார் பெட்டிகள் மூலமாக பொது மக்கள் தங்கள் புகார்களை, கோரிக்கைகளை, ஆலோசனைகளை தெரிவிக் கலாம்.

முத்துப்பேட்டையில் 2-வது நாளாக தீவிரவாத தடுப்பு ஒத்திகை


முத்துப்பேட்டையில் நேற்று 2-வது நாளாக தீவிரவாத தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

தீவிரவாத தடுப்பு ஒத்திகை

திருத்துறைப்பூண்டியை அடுத்த முத்துப்பேட்டையில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவினால் அதை தடுத்து முறியடிப்பது குறித்து 36 மணி நேர தீவிரவாத தடுப்பு ஒத்திகை என்னும் ஆப்ரேஷன் ஆம்லா நேற்றுமுன்தினம் தொடங்கியது. 14 கடலோர மாவட்டங்களில் நடைபெறும் இந்த ஒத்திகையில் கடலோர காவல் படையும், தமிழக போலீசாரும் இணைந்து நடத்தி வருகின்றனர்.

இதில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இந்த ஒத்திகையையொட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போலீஸ்துறை சார்பில் செய்யப்பட்டது. இதனையடுத்து கடலோர பகுதியான கரையங்காடு முதல் இடும்பாவனம், தொண்டியக்காடு, தில்லைவிளாகம், ஜாம்புவானோடை, பேட்டை, செம்படவன்காடு, தம்பிக்கோட்டை வரை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

போலீசார் சோதனை

இதில் முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் ஆகியோர் முத்துப்பேட்டை, இடும்பாவனம், கோபாலசமுத்திரம், பேட்டை, லகூன் ஆகிய பகுதிகளிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் மோட்டார்சைக்கிள், கார் போன்ற வாகனங்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் மீனவர்களின் படகுகளையும் சோதனை செய்தனர். மேலும் அலையாத்திகாடு பகுதிக்கு வந்த சுற்றுலாபயணிகளையும் சோதனையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் நிருபர்களிடம் கூறியதாவது:-

முத்துப்பேட்டை பகுதி தமிழகத்தின் முக்கிய பகுதியாக கருதப்படுகிறது. மேலும் கடலோர பகுதியான அலையாத்திகாடு, லகூன் போன்ற பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவாமல் இருக்க பல்வேறு பாதுகாப்பு பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது நடைபெறும் ஆப்ரேஷன் ஆம்லா சோதனைக்காக தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களிடமும், மீனவர்களிடம் சந்தேகத்துக்கு இடமாக யாராவது தென்பட்டால் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

திருவாரூர் மாவட்டத்தில் 19 ஆயிரம் மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதினர்.


திருவாரூர் மாவட்டத்தில் 19 ஆயிரம் மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதினர்.

பொதுத்தேர்வு

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. திருவாரூர் மாவட்டத்தில் 9 ஆயிரத்து 449 மாணவர்கள், 9 ஆயிரத்து 843 மாணவிகள் ஆக மொத்தம் 19 ஆயிரத்து 292 பேர் மற்றும் தனித்தேர்வர்கள் ஆயிரத்து 200 பேர் தேர்வு எழுதினர்.இந்த தேர்வு 57 மையங்களில் நடக்கிறது. இந்த தேர்வு 57 மையங்களில் நடந்தது. இந்நிலையில் திருவாரூரை அடுத்த அம்மையப்பன் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கொரடாச்சேரி அரசு மேல்நிலைபள்ளியில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வை மாவட்ட கலெக்டர் மதிவாணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பறக்கும் படை

திருவாரூர் மாவட்டத்தில் 19 ஆயிரத்து 292 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். மேலும் 1ஆயிரத்து 200 மாணவர்கள் தனித்தேர்வு எழுதினர். தேர்வு மையங்களில் தேவையான குடிநீர், மின்வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் எதிர்பாராதவிதமாக மின்தடை ஏற்பட்டால் அதனை சரி செய்ய ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையத்திற்கு ஒரு பறக்கும் படை வீதம்57 பறக்கும் படைகள், முதன்மைகல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் தலைமையில் 4 சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.மாணவர்கள் அமைதியான முறையில் தேர்வு எழுத அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

ஆய்வின் போது முதன்மை கல்வி அலுவலர் மணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

கோர்ட்டில் தற்கொலைக்கு முயன்ற முதியவர் கைது


நில மோசடி வழக்கு தள்ளுபடியான விரக்தியில் கோர்ட்டில் தற்கொலைக்கு முயன்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.

நில மோசடி வழக்கு

திருவாரூர் புதுத்தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 80). சமையல் வேலை பா£த்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீட்டு மனையை அதே பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன், தெட்சிணாமூர்த்தி ஆகியோர் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த 1999-ம் ஆண்டு நடராஜன் திருவாரூர் கோர்ட்டில் நில மோசடி வழக்கு தொடர்ந்தார்.

16 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 29-ந் தேதி திருவாரூர் கோர்ட்டில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் நடராஜன் அதிருப்தியில் இருந்தார். நேற்று திருவாரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு வந்த அவர், உரிமையியல் கோர்ட்டிற்கு அருகே சென்றார். பின்னர் தனக்கு நீதி கிடைக்கவில்லை என கூறி மறைத்து வைத்திருந்த மண்எண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட கோர்ட்டு ஊழியர்கள் மற்றும் போலீசார் நடராஜனை தடுத்து சமாதானப்படுத்தினர்.

கைது

இதுதொடர்பாக தகவல் அறிந்த திருவாரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அன்பழகன், இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து நடராஜனை கைது செய்தனர்

புதன், 18 மார்ச், 2015

திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் 16 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி


திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் 16 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை மன்னார்குடி கோட்டம் சார்பில் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள 32 ஊராட்சிகளில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. குன்னூர் தோளாச்சேரியில் நடந்த முகாமை ஒன்றியகுழு தலைவர்  வேதநாயகி சிங்காரவேலு துவக்கி வைத்தார். உதவி இயக்குநர் டாக்டர் லூர்துசாமி, ஊராட்சி மன்ற தலைவர் விஜிலா முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
கொருக்கை ஊராட்சியில் முகாம் நிறைவுற்றது. முகாம் ஒவ்வொரு கிராமங்களிலும் காலை 6 மணி முதல் 9 மணி வரை, மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடைபெற்றது. கால்நடை மருத்துவர் ராமலிங்கம் தலைமையில் டாக்டர்கள் சுரேந்தர், காவ்யா மற்றும் கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் முகாமில் கலந்து கொண்டனர். 16 ஆயிரம் கால்நடைகளுக்கு 8வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை டாக்டர் ராமலிங்கம் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் செய்திருந்தனர்.

திருத்துறைப்பூண்டி கோம்பூர் கிராமத்தை சேர்ந்த ரத்தம் உறையாத நோய் இருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்து மருத்துவர்கள் சாதனை செய்தனர்


திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில் ரத்தம் உறையாத நோய் இருந்த கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்து மருத்துவர்கள் சாதனை செய்தனர்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கோம்பூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை  மனைவி பரமேஸ்வரி(25). இவருக்கு தலை பிரசவம். கருவுற்று 8 மாதங்களான நிலையில் ரத்த சோகை காரணமாக கடந்த மாதம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர், பரமேஸ்வரிக்கு ரத்த கொதிப்பு இருப்பதாகவும், தட்டை அனுக்கள் குறைவாக இருப்பதாகவும், இதனால் வலிப்பு நோய் வரலாம் எனக்கருதி திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். 

மருத்துவ கல்லூரியின் மகப்பேறு டாக்டர் சுமதி தலைமையில் டாக்டர்கள் அவரை பரிசோதித்ததில் அவருக்கு ரத்த உறைதலில் குறைபாடுகள் இருப்பதை கண்டறிந்தனர். பொதுவாக 3 நிமிடங்கள் உரையவேண்டிய ரத்தம் தட்டை அனுக்கள் குறைவாக இருக்கும் காரணத்தால் பரமேஸ்வரிக்கு 15 நிமிடமாகியும் ரத்தம் உறையவில்லை. மேலும் ரத்தக்கொதிப்பால் பாதிக்கப்பட்ட பரமேஸ்வரியின் உடல் முழுவதும் உப்புநீர் காரணமாக வீங்கிய நிலையிலும், அவருக்கு ரத்த நாளங்கள் கண்டுபிடிப்பதே சிரமமாகவும் இருந்தது. இந்நிலையில் மருத்துவ கல்லூரியின் முதல்வர் மீனாட்சி சுந்தரம் ஆலோசனையின் பேரில்  டாக்டர் சந்திரசேகரன் தலைமையில் மருத்துவ குழுவினர் குழந்தையை வெளியே எடுக்க முயற்சி மேற்கொண்டனர். 

கடந்த மாதம் 26 ம் தேதி டாக்டர்கள் சுமதி, சுகன்யா ஆகியோர் கொண்ட குழுவினர் அறுவைச்சிகிச்சையால் 1800 கிராம் எடை கொண்ட பெண் குழந்தையை வெளியே எடுத்தனர். இதனால் பரமேஸ்வரிக்கு உறையாமல் தொடர் ரத்தப்போக்கு இருந்தது. அதனால் 17 பாட்டில்கள் ரத்தம், 30 பாட்டில் பிளாஸ்மா, 10 பாட்டில் தட்டை அனுக்கள் அவருக்கு செலுத்தப்பட்டது. இது தவிர ரத்தம் உறைய தேவைப்படும் 13 காரணிகளில் 7 காரணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்ற காரணத்தால், ரூ. 42 ஆயிரம் மதிப்புள்ள அந்த காரணி பரமேஸ்வரிக்கு செலுத்தப்பட்டது. அதன் பிறகே பரமேஸ்வரியின் உடல் சகஜ நிலைக்கு திரும்பியது. தற்பொழுது பரமேஸ்வரியும், குழந்தையும் நல்ல நிலையில் உள்ளனர்.  ஒரு சில தினங்களில் பரமேஸ்வரியும், குழந்தையும் வீடு திரும்பும் நிலையில் உள்ளனர். இதனையடுத்து அரசு மருத்துவ கல்லூரிக்கு நேற்று சென்ற திருவாரூர் மாவட்ட கலெக்டர் மதிவாணன், சாதனை நிகழ்த்திய டாக்டர் குழுவை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை 20,492 பேர் எழுதுகின்றனர்


திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் நாளை எஸ்.எஸ்.எல்.சி., தேர்வினை தனித்தேர் வர்கள் உள்பட 20 ஆயிரத்து 492 பேர் 57 மையங்களில் எழுதுகின்றனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு நாளை 19ம்தேதி து வங்குகிறது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் 128 அரசு, 43 தனியார் மற்றும் மெட்ரிக், 19 உதவி பெறும், 4 ஆதிதிராவிடர் நலம் மற்றும் 2 நகராட்சி உள் ளிட்ட 100 உயர் நிலை, 106 மேல் நிலை என 206 பள்ளிகளை சேர்ந்த 9 ஆயி ரத்து 449 மாணவர்கள், 9 ஆயிரத்து 843 மாணவியர்கள், ஆயிரத்து 200 தனி த்தேர்வர்கள் என 20 ஆயிரத்து 492 பேர், 57 மையங்களில் தேர்வு எழுதுகின் றனர்.
தேர்விற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

ஈவ்டீசிங்கை தடுக்க ஆலோசனை துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது


திருத்துறைப்பூண்டி பகுதி பள்ளி, கல்லூரிகளில் ஈவ்டீசிங்கை தடுப்பது தொடர்பான ஆலோ சனை கூட்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணதாசன் தலைமை யில் நடந்தது.

ஆலோசனை கூட்டம்

திருவாரூர் மாவட்டம் திருத் துறைப்பூண்டி போலீஸ் நிலை யத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஈவ்சிடிங்கை தடுப்பது தொடர் பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருத்துறைப் பூண்டி போலீஸ் துணை சூப்பிரண்டு கண்ணதாசன் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலு, அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி, சப்-இன்ஸ்பெக்டர் கல்யாண சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

துணை போலீஸ் சூப்பிரண்டு பேசியபோது கூறியதாவது:-

ஆசிரியரின் கடமை

பள்ளி, கல்லூரியில் மாண வர்களை சிறந்த மதிப்பெண் பெற வைப்பது மட்டும் முக் கியம் அல்ல. நல்ல பண்பு களையும், ஒழுக்கத்தையும் கற்று தர வேண்டும். இது ஆசிரியரின் கடமை ஆகும்.

இவ்வாறு அவர் கூறி னார்.

இதில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கட்டிமேடு, நெடும்பலம் அரசு உயர்நிலைப்பள்ளிகள், தூயஅந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சாய்ராம் மெட்ரிக்குலேசன் பள்ளி, புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர் கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். 

தாய், சேய் இறப்பை தடுக்க மருத்துவ நிபுணர்குழு ஆய்வு கலெக்டர் தகவல்

பிரசவத்தின்போது தாய், சேய் இறப்பை தடுக்க மருத்துவ நிபுணர்குழு நியமிக்கப்பட்டுள்ளது என திருவாரூர் கலெக்டர் மதிவாணன் கூறினார்.

கர்ப்பிணி பெண்

திருவாரூர் மாவட்டம் கோம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. விவசாய தொழிலாளி. இவருடைய மனைவி பரமேஸ்வரி (வயது 25). 8 மாத கர்ப்பிணி பெண்ணான பரமேஸ்வரி, ரத்த சோகை நோயால் உடல்நலம் பாதிக்கப்பட்டார்.

பிரசவம் ஆக 2 மாதங்கள் இருந்த நிலையில் ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட பரமேஸ்வரியை திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மகப்பேறு மருத்துவர் சுமதி தலைமையில் மருத்துவக்குழுவினர் பரமேஸ்வரியை பரிசோதனை செய்தனர். அப்போது பரமேஸ்வரிக்கு ரத்த சோகையுடன், ரத்த கொதிப்பு மற்றும் தட்டை அணுக்கள் குறைவாக இருப்பது தெரியவந்தது. ரத்தம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்த பரமேஸ்வரிக்கு வலிப்பு வரலாம் என டாக்டர்கள் கருதினர். இதனிடையே உப்பு நீர்கோர்த்து பரமேஸ்வரி உடல் வீக்கம் அடைந்தார்.

ஆபத்தான நிலையில் பிரசவம்

மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த பரமேஸ்வரிக்கு உடனடியாக அறுவை சிகிச்சை முறையில் பிரசவம் பார்க்க டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி அவருக்கு ரத்த நாளங்களில் செயற்கை குழாய் பொருத்தி பிளாஸ்மா திரவம் உட்செலுத்தப்பட்டது. இதையடுத்து அறுவை சிகிச்சைக்காக முழு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. டாக்டர்கள் சுமதி, சுகன்யா தலைமையில் மருத்துவக்குழுவினர் அறுவை சிகிச்சை செய்து 1800 கிராம் எடை கொண்ட பெண் குழந்தையை வெளியே எடுத்தனர். அதனை தொடர்ந்து 17 பாட்டில் ரத்தம், 30 பாட்டில் பிளாஸ்மா, 10 பாட்டில் தட்டை அணுக்கள் மற்றும் ரத்தம் உறைவதற்கு ரூ.42 ஆயிரம் மதிப்பிலான மருந்து பரமேஸ்வரிக்கு கொடுக்கப்பட்டது. இந்த சிகிச்சைகளுக்காக தொடர்ந்து 3 நாட்கள் செயற்கை சுவாசத்தில் இருந்த பரமேஸ்வரி தற்போது நலமுடன் உள்ளார். அவருடைய குழந்தையும் நலமுடன் உள்ளது.

கலெக்டர் நலம் விசாரிப்பு

ரத்தம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு நல்ல முறையில் பிரசவம் நடந்தது குறித்து தகவல் அறிந்த திருவாரூர் மாவட்ட கலெக்டர் மதிவாணன் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று வந்து, பரமேஸ்வரியையும், அவருடைய குழந்தையையும் பார்த்து நலம் விசாரித்தார்.

அப்போது மருத்துவ கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் இருந்தார்.

பின்னர் கலெக்டர் மதிவாணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ரத்தம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு இருந்த பெண்ணுக்கு திருவாரூர் மருத்துவ கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் தலைமையில் மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளித்து பிரசவம் பார்த்துள்ளனர். இதனால் இப்போது தாயும், சேயும் நலத்துடன் உள்ளனர். இதே சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்தால் ரூ.3½ லட்சம் வரை செலவாகும். ஆனால் மருத்துவ கல்லூரியில் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவ நிபுணர்களை நியமித்துள்ளது. தேவையான மருத்துவ வசதிகள் மருத்துவமனைகளில் செய்யப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் பிரசவத்தால் ஏற்படும் தாய், சேய் உயிரிழப்புகளை தடுக்க மருத்துவர்களை கொண்ட குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் பிரசவத்தில் ஏற்படும் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இவ்வாறு கலெக்டர் கூறினார். 

கள்ளச்சாராயத்துக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்


திருவாரூரில் கள்ளச் சாராயத்துக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு பேரணி

திருவாரூரில் நேற்று கள்ளச் சாராயத்திற்கு எதிரான விழிப் புணர்வு பேரணி நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்ச்சி திரு வாரூர் பழைய ரெயில் நிலை யம் அருகே நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அதிகாரி மோகன்ராஜ் முன் னிலை வகித்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெய சந்திரன் பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறிய தாவது:-

கள்ளச்சாராயத்தை குடித் தால் கண்பார்வை இழப்பு, நினைவாற்றல் குறைதல், உடல் உறுப்புகள் பாதிப்பு, நரம்பு தளர்ச்சி போன்ற பாதிப்புகள் ஏற்படும். தொழில் பாதிக்கப் பட்டு சமூக மரியாதையை இழக்க நேரிடும். மனச்சோர் வுக்கு ஆளாவார்கள். குடும்ப மும் பாதிக்கப்படும்.

கள்ளச்சாராயத்தில் உள்ள மெத்தனால் மரணத்தை ஏற்படுத்த கூடியது. எனவே தான் கள்ளச்சாராயம் பற்றிய விழிப்புணர்வை ஏற் படுத்துவதற்காக விழிப்பு ணர்வு பேரணி நடத்தப்படு கிறது.

இவ்வாறு அவர் கூறி னார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் முன்னதாக கள்ளச்சாராயம் பற்றிய விழிப் புணர்வு கையேட்டை மாவட்ட வருவாய் அதிகாரி மோகன்ராஜ் வெளியிட்டார். நிகழ்ச்சியில் துணை கலெக்டர் விஜ யலட்சுமி, கூடுதல் போலீஸ் சூப் பிரண்டு அனார் கலிபேகம், சமூக நலத்துறை அதிகாரி கீதாகிருஷ்ணவேணி, செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி நல்லதம்பி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka