திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் முறையாக நடைபெறவில்லை எனக் கூறி, திங்கள்கிழமை பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கச்சேரி சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு எதிரே நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ராஜா (திமுக), சுரேந்திரன் (தேமுதிக), வி.டி. செல்வன் (விடுதலைச் சிறுத்தைகள்), ஞானசெüந்தரி (சுயேச்சை) ஆகியோர் தலைமை வகித்தனர்.
பசுமை வீடுகள், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டங்களில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, அதைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேசினர். திமுக ஒன்றிய செயலாளர் பிரகாஷ், நகர செயலாளர் ஆர்.எஸ். பாண்டியன், தேமுதிக ஒன்றிய செயலாளர் ஜமால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தகவலறிந்த உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) செல்வகணபதி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி ஜனவரி 6-ம் தேதிக்குள் முடிவு தெரிவிக்கப்படும் என உத்தரவாதம் அளித்தார். இதைத் தொடர்ந்து, பிற்பகல் 1 மணி அளவில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக