திருத்துறைப்பூண்டி,: கோயில்மனைகளில் குடியிருப்பவர்களுக்கு புதிய வாடகை முறையை ரத்து செய்ய கோரி மாநிலம் முழுவதும் 16ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி மங்கை மஹாலில் கோயில் மனையில் குடியிருப்போர் சங்கம் சார்பில் போராட்ட அறிவிப்பு விளக்க கூட்டம் நடைபெற்றது.
எம்எல்ஏ உலகநாதன் தலைமை வகித்தார். சங்க மாவட்ட தலைவர் வக்கீல் தமிழ்மணி முன்னிலை வகித்தார். நகர செயலாளர் ஸ்ரீநாத் வரவேற்றார். கூட்டத்தில் கோயில் மனையில் குடியிருப்போர் சங்க தமிழ்மாநில பொதுச்செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான சிவபுண் ணியம், மாவட்ட செயலாளர் சந்திரராமன், துணை செயலாளர் பார்த்திபன், பொருளாளர் அன்பழகன், கோவிலூர் ரவி, நகர பொருளாளர் வைத்தியநாதன், விவசாய தொழி லாளர் சங்க மாவட்ட செயலாளர் ஞானமோகன் ஆகியோர் பேசினர். தமிழகம் முழுவதும் கோயில் மனைகளில் குடியிருப்பவர்கள் குடியிருக்கும் மனைக்கு பகுதி முறையில் செலுத்தி வருகின்றனர்.
இந்த நடை முறையை கடந்த 1999 ம் ஆண்டு முதல் மாற்றி வாடகை முறையை அரசு நிர்ணயித்தது. அப்போது மன்னார்குடி எம்எல்ஏவாக இருந்த சிவபுண்ணியம் சட்டபேரவையில் இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்ததால் அரசாணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் 2001 ம் ஆண்டு நவ. 1ம் தேதி முதல் இந்த அரசாணை யை செயல்படுத்த அரசு முடிவு செய்து அறிவித் தது. கோயில் மனையில் குடியிருப்பவர்களுக்கு மனை பகுதி முறையையே தொடர்ந்து செயல்படுத்த வேண்டும், பட்டா வழங்க வலியுறுத்தியும் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
குடிமனைதாரர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். புதிய வாடகை முறையை ரத்து செய்து பழைய பகுதி முறையை நடைமுறைபடுத்த கோரி வரும் 16ம் தேதி தமிழகம் முழுவதும், மாவட்ட, வட்ட, ஒன்றிய தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக