திருத்துறைப்பூண்டி, : குழந்தைகள் வளர்ச்சிதிட்ட மேற்பார்வையாளரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து திருத்துறைப்பூண்டியில் சத்துணவு பணியாளர் சங்கத்தினர் 23ம்தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்கத்தின் திருத்துறைப்பூண்டி ஒன்றிய கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் சங்க மாநில பிரசார செயலாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அரசு பணியாளர் சங்க மாநில அமைப்பு செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட தலைவர் செல்வமணி, சத்துணவு பணியாளர் சங்க மாநில பொருளாளர் சேகர், மாவட்ட செயலாளர் அமிர்தஜெயம், நியாயவிலை கடை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன், அங்கன்வாடி பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் தாமரைச்செல்வி, மாவட்ட அமைப்பாளர் இந்திராணி, ஊராட்சி செயலாளர் சங்க வட்ட தலைவர் பிரஷ்நேவ், வட்ட செயலாளர் சரவணன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் புதிய தலைவர் சுப்பிரமணியன், துணை தலைவர் பக்கிரிசாமி, செயலாளர் செல்வராஜ், துணை செயலாளர் வெற்றிச்செல்வி, பொருளாளர் சத்யா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தேவகி, மகேஸ்வரி, காத்தையன் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் பணியாளர்களிடம் விரோதபோக்கை தொடர்ந்து கடைபிடித்து வரும் திருத்துறைப்பூண்டி குழந்தைகள் வளர்ச்சித்திட்ட மேற்பார்வையாளர் நிலை1 புனிதாவை கண்டித்து வரும் 23ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. துணை தலைவர் பக்கிரிசாமி நன்றி கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக