திருவாரூர் ரயில் நிலையத்தில் 586 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படவுள்ள அகல ரயில் பாதை பணியை தென்னக ரயில்வே தலைமை பொறி யாளர் சுதர்சன்சர்மா நேற்று ஆய்வு செய்தார்.
திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து திருத்துறைப் பூண்டி வழியாக காரைக்குடிக்கு மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதை யாக மாற்றுவதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரயில் சேவை நிறுத்தப்பட்டது. திருத்துறைப்பூண்டியிலிருந்து திருவாரூர் வரையிலான மீட்டர் கேஜ் தண்டவாளங்கள் அகற்றப்பட்ட நிலையில் திருவாரூர் ரயில் நிலையத்தில் இருந்த மீட்டர்கேஜ் ரயில் பாதை மட்டும் அகற்றப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது திருவாரூர் வழி யாக செல்லும் அனைத்து ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் அனைத்தும் அகல ரயில்பாதையில் செல்லும் வகையில் உள்ளதால் மீட்டர்கேஜ் ரயில் பாதை உபயோகமில்லாமல் இருந்து வந்தது. 586 மீட்டர் நீளம் கொண்ட இந்த மீட்டர்கேஜ் தண்டவாளத்தை அகற்றிவிட்டு அகல ரயில்பாதை தண்டவாளம் அமைப்பதற்கு தென்னக ரயில்வே முடிவு செய்தது. அதன்படி தண்டவாளம் அகற்றப்பட்டு அகல பாதை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கியுள்ளன. இந்த பணியை தென்னக ரயில்வே சென்னை கோட்ட தலைமை பொறியாளர் (கட்டுமான பணி) சுதர்சன் சர்மா நேற்று ஆய்வு செய் தார். மேலும் இந்த திட்டம் அமையவுள்ள வரைபடத்தையும் ஆய்வு செய்து பணிகளை விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
tks
-dinakaran

0 கருத்துகள்:
கருத்துரையிடுக