திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முற்றுகை போராட்டம்
முற்றுகை போராட்டம்
திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும், அதில் ஈடுபட்டவர்கள் மீது உரிய விசாரணை செய்து உடன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்திற்கு திருத்துறைப்பூண்டி உலகநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் வையாபுரி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஞானமோகன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஜோசப், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக முத்துப்பேட்டை அம்பேத்கார் சிலையில் இருந்து ஊர்வலமாக சென்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதில் 500–க்கும் மேற்பட்ட ஆண், பெண்கள் கலந்து கொண்டு போராட்டம் செய்தனர். இதில் மாவட்ட கலெக்டர் நியமித்த மூவர் குழுவான உதவி திட்ட இயக்குனர் சீனிவாசன், ஊரக வளர்ச்சி துறு உதவி இயக்குனர் செல்வகணபதி, ஊரக வளர்ச்சி துறை பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் விசாரணை செய்து தவறு இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக