சனி, 13 டிசம்பர், 2014

கோட்டூர் இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்துக்கு தீவைப்பு

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கோட்டூர் பிரதான சாலையில் கீற்றுக்கொட்டகையினால் வேயப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய அலுவலகம் உள்ளது.
இந்த அலுவலகம் புதன்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் தீப்பிடித்து எரிந்தது. இதில் அலுவலகத்துக்குள் இருந்த மின்விசிறி, இருக்கைகள் மற்றும் அலுவலகப் பொருள்கள், முக்கியக் கோப்புகள் எரிந்து நாசமானது.
இதுகுறித்து அக்கட்சியின் ஒன்றியச் செயலர் கே. மாரிமுத்து கோட்டூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், இது விபத்தா, சதி வேலையா என்று போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தகவலறிந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் மன்னார்குடி - திருத்துறைப்பூண்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka