திருத்துறைப்பூண்டி, : குத்தகை முறையை மாற்றி சதுர அடி கணக்கில் நிர்ணயித்த அநியாய வாடகையை ரத்து செய்ய வேண்டும். 3 ஆண்டுகள் அரசு நிலத்தில் இருந்தாலே பட்டா கொடுக்கும் தமிழக அரசு மூன்று தலைமுறையாக குடியிருந்து வருபவர்களுக்கு பட்டா கொடுக்க வேண்டும். சொந்த செலவில் கட்டிய வீட்டை கோயிலுக்கு தானமாக எழுதிக்கேட்கும் அறநிலையத்துறை அதிகாரிகளின் போக்கினை தடுத்து நிறுத்திட வேண்டும். வாரிசுதாரர்களுக்கு பகுதிமாற்றம் செய்து வாங்கியவர்களுக்கும் நிபந்தனையின்றி பெயர் மாற்றம் செய்து கொடுக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோயில் மனையில் குடியிருப்போர் சங்கம் சார்பில் திருத்துறைப்பூண்டி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வக்கீல் தமிழ்மணி, நகர செயலாளர் ஸ்ரீநாத் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயலாளர் சந்திரராமன், நகர பொருளாளர் வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எம்எல்ஏ உலகநாதன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். பாமக மாவட்ட தலைவர் கணேச கவுண்டர், நகை அடகுபிடிப்போர் சங்க தலை வர் நாராயணமூர்த்தி, நகை வியாபாரிகள் சங்க தலைவர் சிங்காரம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஞானமோகன், நகர செயலாளர் முருகேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் முத்துகுமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக