திருத்துறைப்பூண்டி, :பள்ளி கட்டிடம் கட்டக்கோரி திருத்துறைப்பூண்டி அருகே அறிவிக்கப்பட்ட சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 107 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 2 கட்டிடங்கள் பழுதடைந்து விழும் நிலையில் உள்ளது. இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டக்கோரி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அம்பிகாபதி, பள்ளி மேலாண்மைகுழு தலைவர் மங்களநாயகி தலைமையில் நேற்று காலை சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து திருத்துறைப்பூண்டி தாசில்தார் மதியழகன், ஒன்றிய ஆணையர் தமிழ்மணி, ஊராட்சி மன்ற தலைவர் விஜயா, உதவி தொடக்க கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன், தலைமையாசிரியர் முருகையன், எஸ்ஐ அருள்பிரியா ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒருமாத காலத்திற்குள் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனையடுத்து சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக