திருவாரூரில் திங்கள்கிழமை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில், 1 கோடி கையெழுத்து பெறும் இயக்கத்தில் பொதுமக்களிடம் கையெழுத்துப் பெறப்பட்டது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயுவை எடுக்க தனியார் நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், இத்திட்டத்துக்கு அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தற்போது மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் 1 கோடி கையெழுத்து இயக்க பிரசாரம் கடந்த 1 மாத காலமாக பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. 40-வது இடமாக திருவாரூர் பேருந்து நிலையத்தில் கையெழுத்து பிரசார இயக்கம் நடைபெற்றது.
பிரசாரத்தில், மீத்தேன் திட்டத்தை முற்றிலுமாக கைவிடவேண்டும். இதற்கென தனியார் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம் 2015 ஜனவரி 4-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதை நீட்டிக்க கூடாது என்பபது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த கையெழுத்து இயக்கம் வரும் 20-ம் தேதி தஞ்சாவூரில் நிறைவடைகிறது.
பிரசாரத்தில் கூட்டமைப்பு தலைவர் ஜெயராமன், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு விவசாய சங்க பொறுப்பாளர் தனபாலன் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் கையெழுத்துப் பெற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக