சனி, 20 டிசம்பர், 2014

கோட்டூரில் போலீஸாரை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் முற்றுகை போராட்டம்

திருவாரூர் மாவட்டம், கோட்டூரில் போலீஸாரை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.கோட்டூர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய அலுவலகத்தை, கடந்த, 10ம் தேதி, மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர். அதில், 1962ம் ஆண்டு முதலான கட்சியின் ஆவணங்கள் எரிந்து போனது.இச்சம்பவம் குறித்து, கோட்டூர் போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்துள்ளனர். புகார் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்காததால், போலீஸாரை கண்டித்து, நேற்று காலை, 9 மணிக்கு, மாவட்ட செயலாளர் வீரசேனன், எம்.எல்.ஏ., உலகநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., சிவபுண்ணியம் ஆகியோர் உட்பட, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தியக்கம்யூனிஸ்ட் அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.
இதை அறிந்த டி.எஸ்.பி., காளிராஜ் மகேஷ்குமார் உத்தரவின்படி, மன்னார்குடியிலிருந்து வேதாரண்யம் செல்லும் சாலையில், தடுப்புகளை வைத்து போலீஸார் தடுத்து நிறுத்தினர். இருப்பினும், கட்சியினர் தடுப்புகளை மீறி, ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். இதனால், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் செல்லும் பஸ்கள், 5 மணி நேரம் நிறுத்தப்பட்டது.எஸ்.பி., காளிதாஸ் மகேஸ்குமார், டி.ஆர்.ஓ., மணிமாறன், மன்னார்குடி ஆர்.டி.ஓ., செல்வசுரபி, தாசில்தார் ரெங்கராஜன், திருத்துறைப்பூண்டி டி.எஸ்.பி., அப்பாசாமி ஆகியோர், முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது, இன்னும் மூன்று நாட்களில், தீ வைப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்வதாக, மாவட்ட எஸ்.பி., காளிதாஸ் உறுதியளித்தார்.இதையடுத்து, முற்றுகை போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka