சனி, 6 டிசம்பர், 2014

திருவாரூர் மாவட்டத்தில் குடும்ப அட்டையில் உள்தாள் ஒட்டும் பணி டிச. 15 முதல் தொடக்கம்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைக்கு 2015-ம் ஆண்டுக்கான உள்தாள் ஒட்டும் பணி நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளின் புழங்கும் காலத்தை 2015 ஜனவரி 1-ம் தேதி முதல் 2015 டிச. 31-ம் வரை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அரசு ஆணையின்படி, குடும்ப அட்டைகளை புதுப்பிக்கும் பணி நியாயவிலைக் கடைகளில் டிச. 15 முதல் நடைபெற உள்ளது.
எனவே, குடும்பத் தலைவர் அல்லது குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் நியாயவிலைக் கடைக்கு குடும்ப அட்டையை எடுத்துச் சென்று 2015-ம் ஆண்டுக்கான உள்தாளை இணைத்துக் கொண்டு நியாவிலைக் கடையில் பராமரிக்கப்படும் 2015-ம் ஆண்டின் வழங்கல் பதிவேட்டில் கையொப்பம் அல்லது இடது கை பெருவிரல் ரேகை பதிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கையொப்பமிட்டால் அல்லது கைரேகை பதித்தால்தான் குடும்ப அட்டை புதுப்பித்தல் பணி முடிவுற்றதாகக் கருதப்படும்.
கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் குடும்ப அட்டை வரிசை எண் வாரியாக ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குடும்ப அட்டைகளை புதுப்பிக்க நியாயவிலைக் கடை பணியாளாóகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனுடைய விவரம் அந்தந்த நியாயவிலைக் கடைகளில் விளம்பரப் படுத்தப்பட்டுள்ளன. தங்களுக்குரிய நாளில் நியாயவிலைக் கடைகளுக்கு சென்று குடும்ப அட்டைகளில் உள்தாள்களை ஒட்டிக்கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka