சனி, 20 டிசம்பர், 2014

திருத்துறைப்பூண்டி ஒன்றியக்குழுத் தலைவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு

திருத்துறைப்பூண்டி ஒன்றியக்குழுத் தலைவர் அதிமுகவைச் வேதநாயகியை பதவி நீக்கம் செய்யக் கோரி திருவாரூர் நீதிமன்றத்தில் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர்கள் முத்துக்குமார், கோபால்ராமன் ஆகியோர் புதன்கிழமை வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதுகுறித்து மனுவில் கூறியிருப்பதாவது: திருத்துறைப்பூண்டி அதிமுக ஒன்றியக்குழுத் தலைவர் வேதநாயகி. இவர் தனது கணவர் சிங்காரவேல் என்பவருக்கு திருத்துறைப்பூண்டி ஒன்றியத்துக்குள்பட்ட ஊரக வளாóச்சித்துறை மூலமாக நடைபெறும் ஒப்பந்த பணிகளை வழங்கியுள்ளார். இதுகுறித்து பலமுறை தொடர்புடைய அலுவலர்களுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக் கவில்லை. ஒன்றியக் குழுத் தலைவர் வேதநாயகி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளார். எனவே, ஒன்றியக் குழுத் தலைவர் பதவியில் இருந்து வேதநாயகியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை ஆய்வு செய்த திருவாரூர் மாவட்ட நீதிபதி ஜாகீர்உசேன், புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். மனு மீதான விசாரணையை 2015 ஜனவரி 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
விசாரணையின் போது, உள்ளாட்சித் தேர்தலுக்கான தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர், திருவாரூர் மாவட்ட ஆட்சியர், ஒன்றியக்குழுத் தலைவர் வேதநாயகி உள்ளிட்ட 7 பேர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka