திருவாரூர் :வேளாண்துறையில் இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என கலெக்டர் பேசினார்.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே ராஜப்பையன்சாவடியில் பட்ட தாரி இளைஞர் ஜீத்தமன்கிருஷ்ணன் தனது வயலில் ஆயிரம் சதுர மீட்டர் அளவிற்கு நவீன வேளாண் தொழில்நுட்பங்களைக்கையாண்டு நெல்லுக்கு மாற்றுப்பயிராக 14 லட்ச ரூபாய் மதிப்பில் பாலி ஹவுஸ் அமைத்து மண் இல்லாமல் கயறு நாரைக்கொண்டு தளம் அமைத்து அதில் நவீன தொழில் நுட்பங்களை கையாண்டு வெள்ளரி விதை நேர்த்தி செய்ய முன் வந்தார்.
இதற்கான விழாவில் கலெக்டர் மதிவாணன் சிறப்பு விருந்தினராக பங் கேற்று விதைகளை நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில்:
திருவாரூர் மாவட்டத்தில் இளைஞர்களைக் கொண்டு வேளாண்மைக் குழுக்களை அமைத்து அதில் அதிக அளவில் பங்கேற்கச்செய்து நவீன தொழில் நுட்பங்களைக் கையாண்டு வேளாண்மையில் புரட்சியை ஏற்ப டுத்துவது அவசியமானதாகும்.
இளைஞர்கள் வேளாண்மையில் தங்களை தீவிரமாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். விவசாயம் என்பது புலி வாலைப்பிடித்தது போல் கருதும் நிலை உள்ளது.
குறிப்பாக படித்த இளைஞர்கள் அதிக அளவில் தங்களை வேளாண்துறையில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகம் முழு ஒத்து ழை ப்பு அளிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் காவிரிரெங்கநாதன்,வேளாண் இணை இயக்குனர் மயில் வாக ணன் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் சோழன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முன் னதாக பண்ணையில் நெல், வாழை சாகுபடி களையும் ,பண்ணைக் குட் டைகள் அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வை யிட்டார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக