ஞாயிறு, 21 டிசம்பர், 2014

நாகப்பட்டினத்தில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா

நாகப்பட்டினத்தில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா வியாழக்கிழமை மாவட்ட வருவாய் அலுவலர் அ. பெஞ்சமின் பாபு தலைமையில் நடைபெற்றது.
விழாவை தொடங்கிவைத்து அவர் பேசியது: இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், புத்த மதத்தினர், பாரசீகர்கள் மற்றும் சீக்கியர்கள் ஆகியோரின் உரிமைகளை பாதுகாக்கவும், சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் சரியாக சென்றடைய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சிறுபான்மை மக்கள் சமூக, கல்வி மற்றும்
பொருளாதார ரீதியாக மேம்பாடு அடையும் நோக்கத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் 18-ம் தேதி சிறுபான்மையினர் உரிமைகள் தின நாளாக கொண்டாடப்படுகிறது. நாகை மாவட்டத்தில், உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியத்தில் 285
உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிறுபான்மையினர் இனத்தைச் சேர்ந்த தனிநபர், குழுக்கள் மற்றும் சங்கங்களுக்கு உதவிடும் வகையில் குறைந்த வட்டி விகிதத்தில் பொருளாதார முன்னேற்றத்துக்கான சிறு தொழில்கள், வியாபாரம் தொடங்க ரூ. 1 லட்சம் வரை கடன் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது. 2014-2015 ஆண்டுக்கு ரூ. 39 லட்சம் மதிப்பில் தொழில் கடன் கோரிய 113 சிறுபான்மையினரின் மனுக்கள் பரிந்துரை செய்யபட்டுள்ளது. வயது முதிர்ந்த ஆதரவற்ற, கணவரால் கைவிடப்பட்ட முஸ்லிம் மகளிர் நலனுக்காக முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதன்மூலம் ஏழ்மை நிலையில் உள்ள முஸ்லிம் சமுதாயத்தை சார்ந்த மகளிருக்கு உதவிகள், பயிற்சிகள் வழங்கப்படும் என்றார் பெஞ்சமின் பாபு. விழாவில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஏ. ஆர்.ஏ. ஜெயராஜ், தனி வட்டாட்சியர் மலர்விழி, மாநில சிறுபான்மையினர் நல உறுப்பினர் ஹாஜி. எம்.எஸ். முபாரக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka