திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் கணினி மயமாக்கப்பட்டுள்ளதால் கூடுதல் பதிவு, புதுப்பித்தல், சலுகை புதுப்பித்தல் ஆகிய பணிகளை இணையதளம் மூலம் மனுதாரர்கள் மேற்கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவாருர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் மேற்கூறியவாறு பணிகளை ஆன்லைன் வசதியுள்ள அனைவரும் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ங்ப்ஹண்ஸ்ஹஹல்ல்ன்.ஞ்ர்ஸ்.ண்ய்என்ற இனையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். இதுவரை தங்களது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை இணையதளம் வழியாக கணினியில் முழுமைபடுத்திக் கொள்ளாதவர்கள் உடனே அலுவலக வேலை நாளில் முற்பகல் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேரில் சென்று பதிவை முழுமைப்படுத்திக்கொள்ளலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக