திருத்துறைப்பூண்டி,: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்கம் சார்பில் திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் முதல் முத்துப்பேட்டை ரோடு வரை விழிப்புணர்வு மற்றும் தூய்மை செய்யும் பணி நடைபெற்றது. டெல்டா ரோட்டரி சங்கத் தலைவர் ரகுராமன் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் குருசாமி, வர்த்தக சங்க தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். தூய்மை செய்யும் பணியில் டெல்டா ரோட்டரி சங்க உறுப்பினர்கள், திருத்துறைப்பூண்டி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நெடும்பலம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் 150 பேர் ஈடுபட்டனர்.
தூய்மையை வலியுறுத்தும் வகையில் குப்பைக் கூடைகள், துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது. நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெங்கடாஜலம், என்எஸ்எஸ் திட்ட அலுவலர்கள் வெங்கடேசன், சக்கரபாணி, விஜயலெட்சுமி, நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், ரோட்டரி சங்க உதவி ஆளுநர் தேர்வு ஆதப்பன், டெல்டா ரோட்டரி சங்க திட்ட இயக்குனர் சிவகுமார், செயலாளர் சுராஜ், பொருளாளர் செல்வகுமார் மற்றும் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக