திருத்துறைப்பூண்டி அருகே அண்ணாநகரில் பெட்டிக்கடை வைத்திருப்பவர் சிங்காரவேலு. இவரது மனைவி லட்சுமி கடையில் இருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த ஐயப்பன், ரமேஷ் ஆகியோர் மற்றும் சிலருடன் வாய்த்தகராறில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்த கடையில் இருந்த சோடாபாட்டிலை எடுத்தார்களாம். இதைத் தட்டிக்கேட்ட லட்சுமியை தள்ளிவிட்டதில் லட்சுமி காயமடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீஸார் ஐயப்பனை கைது செய்தனர்.
திங்கள், 15 பிப்ரவரி, 2016
அண்ணாநகரில் - இளைஞர் கைது
திருத்துறைப்பூண்டி அருகே அண்ணாநகரில் பெட்டிக்கடை வைத்திருப்பவர் சிங்காரவேலு. இவரது மனைவி லட்சுமி கடையில் இருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த ஐயப்பன், ரமேஷ் ஆகியோர் மற்றும் சிலருடன் வாய்த்தகராறில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்த கடையில் இருந்த சோடாபாட்டிலை எடுத்தார்களாம். இதைத் தட்டிக்கேட்ட லட்சுமியை தள்ளிவிட்டதில் லட்சுமி காயமடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீஸார் ஐயப்பனை கைது செய்தனர்.
வேலைவாய்ப்பு முகாம்: 4,105 பேருக்கு வேலை கிடைத்தது !!!
சொரக்குடியில் வேலைவாய்ப்புத்துறை, தொழிலகப் பாதுகாப்பு சுகாதார இயக்கம், திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்து உணவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் பேசியது:
முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசில் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையிலான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்படுகிறது.

நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 57,315 பேர் பங்கேற்றனர். இதில் 19 மாற்றுத் திறனாளிகள் உள்பட 4,105 பேர் நேரடி நியமனம் பெற்றனர்.
மேலும், இதுதவிர திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக 3,446 பேர், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக 605 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்றார் காமராஜ்.
ஊரக தொழில்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ப. மோகன் பேசியது:
முதலமைச்சர் ஜெயலலிதா கல்விக்காக ரூ. 85,000 கோடி நிதி ஒதுக்கி செலவிட்டுள்ளார். எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு பல்வேறு மக்கள் நலப் பணிகளைச் செயல்படுத்தி வருகிறார். திருவாரூரில் நடைபெற்ற 13 ஆவது வேலைவாய்ப்பு முகாமில் பல்லாயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 38 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு முகாமுக்கு வருபவர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் குறைந்தவர்களுக்காக திறன் மேம்பாட்டுக் கழகம் அமைத்து பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.
கிராமப் பகுதிகளுக்குத்தான் அதிகமாக தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளன.
திருவாரூர் மாவட்டத்தில் 11 இடங்களில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை தொழிற்பேட்டை இல்லாததால், மாவட்டத்தில் தொழிற்பேட்டை அமைக்க உத்தரவிடப்பட்டு 27.55 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் மோகன்.

இலவச கண் பரிசோதனை முகாம்

ஜேசீஸ் சங்கம், ஜி.டி. பவுண்டேஷன், திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை ஆகியவை சார்பில் பி.கே.டி. மருத்துவக் குழும வளாகத்தில் இந்த முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு ஜேசீஸ் தலைவர் ஆர். அரவிந்த் தலைமை வகித்தார். அனன்யா கருத்தரிப்பு மைய இயக்குநர் டாக்டர் ஷருண் முன்னிலை வகித்தார். ஜி.டி. பவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர் டாக்டர் டி. ராஜா முகாமை தொடங்கிவைத்தார். இந்த முகாமில் ஜோசப் கண் மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்று 100 பேரை பரிசோதித்தனர். இதில் 22 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு, திருச்சி ஜோசப் கண் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ஜேசீஸ் சங்க இணைச் செயலர் எம்.எஸ். மணிவண்ணன் நன்றி கூறினார்
சனி, 13 பிப்ரவரி, 2016
ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் ஊர்க் காவல் படையில் காலியாகவுள்ள 49 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
எனவே இதில் சேர விரும்புவோர் 18 முதல் 45 வயதுக்குள்பட்ட, எஸ்எஸ்எல்சி தேர்ச்சிப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்படும் ஊர்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று பிப்.17-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் பிப்.23-ஆம் தேதி தகுதித் தேர்வு நடைபெறுகிறது
வேதாரண்யம் கூட்டு குடிநீர் பிப்.16, 17-இல் விநியோகம் இருக்காது

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கர்ப்பிணியைத் தாக்கியதாக காதலன் உறவினர்கள் கைது
பெருகவாழ்ந்தான் அருகே திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலித்து கர்ப்பமாக்கிய பெண்ணைத் தாக்கியதாக காதலனின் உறவினர்கள் 2 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
பெருகவாழ்ந்தான் காவல் சரகத்துக்கு உள்பட்ட மரவாதி, கீழத்தெருவைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் பார்த்தசாரதியும், அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகள் தீபிகாவும் (20) காதலித்து வந்தனராம். தீபிகாவை திருமணம் செய்து கொள்வதாக பார்த்தசாரதி கூறியிருந்தாராம். இருவரும் பழகியதில் தீபிகா கர்ப்பமடைந்தார்.
இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தீபிகா கூறி வந்தார். ஆனால், பார்த்தசாரதி தாமதம் செய்து வந்தாராம்.
இந்த நிலையில் பார்த்தசாரதியின் வீட்டுக்கு தீபிகா சனிக்கிழமை சென்று பேசியுள்ளார். அப்போது அங்கிருந்த பன்னீர்செல்லம், அவரது மனைவி வசந்தா, மகன் பிரசாத், உறவினர் அன்பழகன், அவரது மனைவி பூபதி ஆகியோர் தாக்கியதில் தீபிகா காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து தீபிகா அளித்த புகாரின்பேரில், பெருகவாழ்ந்தான் போலீஸார் வழக்குப் பதிந்து பன்னீர்செல்வம் (48), அன்பழகன் (38) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
tks
http://www.dinamani.com

இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தீபிகா கூறி வந்தார். ஆனால், பார்த்தசாரதி தாமதம் செய்து வந்தாராம்.
இந்த நிலையில் பார்த்தசாரதியின் வீட்டுக்கு தீபிகா சனிக்கிழமை சென்று பேசியுள்ளார். அப்போது அங்கிருந்த பன்னீர்செல்லம், அவரது மனைவி வசந்தா, மகன் பிரசாத், உறவினர் அன்பழகன், அவரது மனைவி பூபதி ஆகியோர் தாக்கியதில் தீபிகா காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து தீபிகா அளித்த புகாரின்பேரில், பெருகவாழ்ந்தான் போலீஸார் வழக்குப் பதிந்து பன்னீர்செல்வம் (48), அன்பழகன் (38) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
tks
http://www.dinamani.com
திருத்துறைப்பூண்டி பகுதியில் மதுபானம் விற்ற 3 பேர் கைது

திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெறும் மது விற்பனையைத் தடுக்க போலீஸார் தொடர்ந்து சோதனை பணி மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸார் வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, திருத்துறைப்பூண்டி பகுதியில் மதுபானம் விற்ற பட்டுக்கோட்டை தினேஷ்பாபு (25), புதுக்கோட்டை ராஜன் (31), திருவாரூர் அருகே அத்திசோழமங்கலம் மதன் (24) உள்ளிட்ட 10 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 54 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனர்.
வெள்ளி, 12 பிப்ரவரி, 2016
தேனீக்கள் அழிந்துவிட்டால் அடுத்த நான்கு ஆண்டுகளில் மனித இனம் அழிய தொடங்கும்!!!

இனிக்கும் செய்தியல்ல!
தேனீ... உலகின் மிக சுவாரஸ்யமான, நுணுக்கமான உயிரினம். அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத் தெரிந்துகொள்ளலாமா?
முதலில்... ஆச்சரியம். தக்கனூண்டு சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச் சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர். தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச் போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய், பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச் சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும் தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும் காரணம்.
தேனீயின் தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப், வாட்ஸ்அப் முறைகளை விடத் துல்லியமானது. யானை, ஆமைகளுக்கு ஞாபகசக்தி அதிகம் என்போம். ஆனால், அவற்றைவிடவும் கூர்மையான ஞாபகசக்தி கொண்டவை தேனீக்கள். இதுபோல இன்னும் பல ஆச்சரியங்கள் அந்தத் தக்கனூண்டு உடம்பில் இருக்கின்றன. ஆனால், அதிர்ச்சி தரும் விஷயம்... அந்தத் தேனீக்கள் இப்போது 'அழிந்துவரும் உயிரினங்கள்’ பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன.
தேனீயின் தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப், வாட்ஸ்அப் முறைகளை விடத் துல்லியமானது. யானை, ஆமைகளுக்கு ஞாபகசக்தி அதிகம் என்போம். ஆனால், அவற்றைவிடவும் கூர்மையான ஞாபகசக்தி கொண்டவை தேனீக்கள். இதுபோல இன்னும் பல ஆச்சரியங்கள் அந்தத் தக்கனூண்டு உடம்பில் இருக்கின்றன. ஆனால், அதிர்ச்சி தரும் விஷயம்... அந்தத் தேனீக்கள் இப்போது 'அழிந்துவரும் உயிரினங்கள்’ பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன.
ஆம்... 'உலகை உலுக்கும் செய்தி’ என்றால், நிச்சயம் இதுதான். ஒட்டுமொத்த மக்கள் தொகையாலும் பூமிக்கு விளையாத நன்மை, ஒரே ஒரு தேனீயால் விளையும். அந்த அளவுக்குத் தேனீயின் ஒவ்வொரு சிறகசைப்பும் பூமிப் பந்தில் பசுமைப் போர்வையைப் போத்துகிறது. தேனீக்களின் 'லைஃப்ஸ்டைல்’ பற்றி தெரிந்துகொண்டால்தான், அது காடுகளின் பெருக்கத்துக்கு எப்பேர்ப்பட்ட நன்மை விளைவிக்கிறது என்று புரியும்.
தேனீக்களின் வாழ்வியல் குணங்களைப் பற்றி கேட்டதும், சுவாரஸ்யமாகப் பட்டியலிட்டார் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பூச்சிகள் துறையைச் சேர்ந்த டாக்டர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.
தேனீக்களின் வாழ்வியல் குணங்களைப் பற்றி கேட்டதும், சுவாரஸ்யமாகப் பட்டியலிட்டார் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பூச்சிகள் துறையைச் சேர்ந்த டாக்டர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.
''உலகத்தில் அஞ்சு வகை தேனீக்கள் இருக்கு. மலைத் தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத் தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத் தேனீ. இதில் இந்திய, இத்தாலிய மற்றும் கொடுக்கில்லாத் தேனீக்களைத்தான் மனிதர்கள் வளர்ப்பாங்க. மத்த தேனீக்கள் தானாகவே காட்டில் வளரும். ஒரு குடும்பத்தில் ஒரு ராணித் தேனீ, சில நூறு ஆண் தேனீக்கள், பல்லாயிரம் பணித் தேனீக்கள் (பெண்கள்) இருக்கும். இதில் ஆண் தேனீக்களுக்கு 90 நாள்களும், பணித் தேனீக்களுக்கு 70 நாள்களும், ராணித் தேனீக்கு இரண்டு வருடங்களும் ஆயுள். ராணித் தேனீக்களுக்கு முட்டையிடுவது மட்டும்தான் வேலை. ஆண் தேனீக்கு, ராணியோடு புணர்வதும் தேன் கூட்டைப் பாதுகாப்பதும் கடமை. மற்ற எல்லா வேலைகளும் பணித் தேனீக்கள் பொறுப்பு. உணவுச் சேகரிப்பு, தேன்கூடு கட்டுவது, தேனைப் பக்குவப்படுத்துவது, கூட்டைச் சுத்தமாகப் பராமரிப்பதுனு எல்லா வேலைகளையும் பணித் தேனீக்கள்தான் கவனிக்கும்.
தேனீக்களின் பொறியியல் அறிவு அபாரமானது. தேன் கூட்டை அறுங்கோண வடிவத்துல கட்டும். ஏன்னா, அப்பத்தான் ஒரு சென்ட்டிமீட்டர் இடத்தைக்கூட வீணாக்காம முழுசாப் பயன்படுத்த முடியும். ஆண் தேனீகளுக்குப் பெரிய அறுங்கோண செல், பணித் தேனீக்களுக்குச் சிறிய அறுங்கோண செல் வடிவத்தில் கூடு கட்டிட்டு, ராணித் தேனீக்கு சிலிண்டர் வடிவில் செல் கட்டும். கூட்டின் கட்டுமானம் திருப்தியாக இருந்தால் மட்டுமே, ராணித் தேனீ அதில் முட்டையிடும்.

கூட்டுக்குத் திரும்பி வரும் தேனீக்கள், கூட்டின் வாசலில் காத்திருக்கும் தேனீக்களிடம் அந்தத் திரவத்தை ஒப்படைக்கும். அதற்காக ஏப்பமிட்டு ஏப்பமிட்டு தேன் பையில் இருந்து திரவத்தை வெளியில் கொண்டுவந்து எதிர் தேனீயின் வாயில் கொட்டும். ஒரு தேனீ இப்படி 50 முறை கக்கினால்தான், ஒரு துளி தேன் சேரும். கூட்டைப் பராமரிக்கும் தேனீக்கள் அந்தத் திரவத்தைக் கூட்டின் ஓர் ஒரத்தில் இருக்கும் தேனடையில் கக்கி, அதில் இன்வர்டோஸ் எனும் நொதியைச் சேர்க்கும். பிறகு அந்தத் திரவத்தில் இருந்து நீர்த்தன்மை வற்றிப்போவதற்காக தன் இறகை ஆட்டி ஆட்டி ஆவியாக்கும். பிறகு தேனைப் பாதுகாக்க ஒருவகை மெழுகைப் பூசிவைக்கும். இத்தனை நடைமுறைகளுக்குப் பிறகுதான் நாம் சுவைக்கும் தேன் உருவாகும். தேன் எடுப்பவர்கள் கொஞ்சம் தேனை தேனிக்களுக்கு எனக் கூட்டில் விட்டுத்தான் எடுப்பார்கள். அதுதான் தேன் சேகரிக்கும் தர்மம்!
இந்த வேலை நடக்கும்போது ராணித் தேனீ அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும். இனப்பெருக்கக் காலத்தில் மட்டும்தான் அதற்கு வேலை வரும். அந்தச் சமயத்தில் வேகமாக ராணித் தேனீ உயரத்துக்குப் பறக்கும். அதை எந்த ஆண் தேனீ துரத்திப் பிடிக்கிறதோ, அதோடுதான் இணை சேரும் ராணி. புணர்ச்சி முடிந்தவுடன் ஆண் இறந்துவிடும். அதன் பிறகு ராணித் தேனீ முட்டையிட, முட்டையில் இருந்து வரும் தேனீக்களைப் பணித் தேனீக்கள்தான் வளர்ப்புத் தாயாக வளர்க்கும்!
தேன் சேகரிப்பதற்கான தகவல்களை தேனீக்கள் பகிர்ந்துகொள்ளும் முறை அட்டகாசமானது. உணவுத் தேவை ஏற்படும்போது 'ஸ்கவுட்’ ஆக சில தேனீக்கள் முன்னே சென்று பூக்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டுக் கூட்டுக்குத் திரும்பும். கூட்டில் உள்ள மற்ற பணித் தேனீக்களுக்கு ஸ்கவுட் தேனீக்கள், தாங்கள் கண்டுபிடித்த தோட்டம் அல்லது சோலை எந்தத் திசையில் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை நடனம் ஆடித் தெரிவிக்கும்.
இதில் இரண்டு வித நடனங்கள் உள்ளன. வட்ட நடனம் மற்றும் வாலாட்டு நடனம். வட்ட நடனத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு பூக்கள் இருக்கும் தொலைவை மட்டும் குறிக்கும். வாலாட்டு நடனத்தில் உயரப் பறந்து வாலை ஆட்டினால், சூரியன் இருக்கும் அதே திசையில் உணவு உள்ளது என்றும், கீழே பறந்து வாலை ஆட்டினால், சூரியனுக்கு நேரெதிர் திசையில் தோட்டம் உள்ளது என்றும் அர்த்தம். வாலை வேகமாக ஆட்டினால், சோலை அருகில் உள்ளது என்றும், மெதுவாக ஆட்டினால், தொலைவில் உள்ளது என்றும் அர்த்தம்.
இதில் இரண்டு வித நடனங்கள் உள்ளன. வட்ட நடனம் மற்றும் வாலாட்டு நடனம். வட்ட நடனத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு பூக்கள் இருக்கும் தொலைவை மட்டும் குறிக்கும். வாலாட்டு நடனத்தில் உயரப் பறந்து வாலை ஆட்டினால், சூரியன் இருக்கும் அதே திசையில் உணவு உள்ளது என்றும், கீழே பறந்து வாலை ஆட்டினால், சூரியனுக்கு நேரெதிர் திசையில் தோட்டம் உள்ளது என்றும் அர்த்தம். வாலை வேகமாக ஆட்டினால், சோலை அருகில் உள்ளது என்றும், மெதுவாக ஆட்டினால், தொலைவில் உள்ளது என்றும் அர்த்தம்.

தேன் சேகரிக்கும்போது தேனீக்களின் காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின் மகரந்தம், அடுத்தடுத்து பூக்களின் மேல் உட்காரும்போது, விதவிதமான கூட்டணியுடன் பரவும். இதுதான் காடுகளின், சோலைகளின் பரவலுக்குக் காரணம். தேனீக்களை அதிகம் காடுகளுக்குள்தான் பார்க்க முடியும். காரணம், தேனீக்கள் இருக்கிற இடத்திலேயே இயற்கையாகவே அடர்ந்த காடுகள் உருவாகிவிடும்!''
''அழியும் உயிரினம் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவுக்கு தேனீக்களுக்கு என்ன ஆபத்து?''
''அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளில் தேனீக்கள் அழிந்துவரும் உயிரினங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்கு தேனீக்கள் அழிந்துவிட்டன. அதாவது, தேனீக்களின் அழிவு சதவிகிதம் 42 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இன்னும் இந்தியாவில் தேனீக்களுக்கு அந்த அளவுக்குப் பெரிய அபாயம் ஏற்படவில்லை. ஆனால், கூடிய சீக்கிரமே அந்த நிலைமை வரலாம்.
தேனீக்களின் இந்தப் பேரழிவுக்குக் காரணம், Colony Collapse Disorder - சுருக்கமாக... CCD. அதாவது கூட்டில் இருந்து உணவு சேகரிக்கச் சென்ற பணித் தேனீக்கள் கொத்துக்கொத்தாகக் காணாமல்போய்விடும். ராணி மட்டும் கூட்டில் இருக்கும். பணித் தேனீக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டால், ராணித் தேனீ என்ன செய்வதெனத் தெரியாமல் குழம்பி, சீக்கிரமே இறந்துவிடும். இல்லையெனில், வேறு கூடு தேடிப் போய்விடும். பணித் தேனீக்கள் இப்படித் தொலைந்துபோவதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது... செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள். செயற்கை உரத்தில் உள்ள நியோ நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள், தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து அவற்றின் நினைவுத்திறனை மழுங்கடித்துவிடும். இதனால் கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய் பறந்துபோய் அலைந்து திரிந்து இறந்துவிடும். மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர்களின் விதைகளை 'டெர்மினேட்டர் சீட்ஸ்’ என்பார்கள். அதாவது, அந்தப் பயிர்கள் 'விதை தானியத்தை’ உருவாக்காது. மலட்டு விதைகளைத்தான் உருவாக்கும். அப்படியான மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம் செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி, ஒரு கட்டத்தில் தேனீக்களைக் கொன்றேவிடும்.
தேனீக்களின் இந்தப் பேரழிவுக்குக் காரணம், Colony Collapse Disorder - சுருக்கமாக... CCD. அதாவது கூட்டில் இருந்து உணவு சேகரிக்கச் சென்ற பணித் தேனீக்கள் கொத்துக்கொத்தாகக் காணாமல்போய்விடும். ராணி மட்டும் கூட்டில் இருக்கும். பணித் தேனீக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டால், ராணித் தேனீ என்ன செய்வதெனத் தெரியாமல் குழம்பி, சீக்கிரமே இறந்துவிடும். இல்லையெனில், வேறு கூடு தேடிப் போய்விடும். பணித் தேனீக்கள் இப்படித் தொலைந்துபோவதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது... செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள். செயற்கை உரத்தில் உள்ள நியோ நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள், தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து அவற்றின் நினைவுத்திறனை மழுங்கடித்துவிடும். இதனால் கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய் பறந்துபோய் அலைந்து திரிந்து இறந்துவிடும். மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர்களின் விதைகளை 'டெர்மினேட்டர் சீட்ஸ்’ என்பார்கள். அதாவது, அந்தப் பயிர்கள் 'விதை தானியத்தை’ உருவாக்காது. மலட்டு விதைகளைத்தான் உருவாக்கும். அப்படியான மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம் செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி, ஒரு கட்டத்தில் தேனீக்களைக் கொன்றேவிடும்.
இப்படி விவசாயத்தில் 'வணிக லாபத்துக்காக’ மனிதன் செய்த பல மாற்றங்கள் தேனீக்களை அழிக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஐந்து வருடங்களாக விவசாய உற்பத்தி பெருமளவு குறைந்துவருவதற்குக் காரணம் தேனீக்களின் இறப்பு எனத் தெரியவந்தது. அதனால், அங்கு செயற்கை உரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள் போன்றவற்றைத் தடை செய்துவிட்டனர். வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து தங்கள் வயல்களில் பறக்கவிட்டு மகரந்தச்சேர்க்கை உண்டாக்க முயற்சிக்கிறார்கள். பல லட்சம் தேனீக்களை அழித்த சுயநல மனிதனால், ஒரே ஒரு தேனீயைக்கூட உருவாக்க முடியாது. இதை நாம் எப்போது உணர்வோம்?'' என்று வருத்தமாகச் சொல்கிறார் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.
'தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது!’ என்று சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஜாக்கிரதை.....
புதன், 10 பிப்ரவரி, 2016
வேலைவாய்ப்பு முகாம் குறித்து ஆட்சியர் எம். மதிவாணன் ஆய்வு
நன்னிலம் அருகேயுள்ள சொரக்குடியில் பிப். 14 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதற்காக நடைபெற்று வரும் பணிகள் தொடர்புடைய அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
செவ்வாய்க்கிழமை ஆட்சியர் எம். மதிவாணன் ஆய்வு மேற்கொண்டு வேலையளிக்கும் நிறுவனங்களுக்காக அரங்குகள் அமைக்கப்பட்டு வருவது, மாற்றுத் திறனாளிகளுக்கான கழிவறை வசதி, போக்குவரத்து வசதி குறித்து ஆய்வு செய்து தொடர்புடைய அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
அரங்குகளைச் சுற்றி குப்பைத் தொட்டிகள், குடிநீர்த் தொட்டி அமைப்பது குறித்தும் அறிவுரை வழங்கப்பட்டன.
ஆய்வின்போது, கோட்டாட்சியர் முத்துமீனாட்சி, நன்னிலம் வட்டாட்சியர் அம்பிகாபதி ஆகியோர் உடனிருந்தனர்.
காவிரிப் படுகையிலிருந்து ஓஎன்ஜிசி வெளியேறக் கோரி மறியல்: 210 பேர் கைது

காவிரிப் படுகையை விட்டு, ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வலியுறுத்தி, திருவாரூர் அருகேயுள்ள கிடாரங்கொண்டானில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் 210 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஓஎன்ஜிசி நிறுவனத்தை முற்றிலுமாக காவிரி டெல்டா மாவட்டத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி, பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, திருவாரூர் அருகேயுள்ள கிடாரங்கொண்டானில் செவ்வாய்க்கிழமை அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, அதே பகுதியிலுள்ள ஓஎன்ஜிசியை முற்றுகையிட பேரணியாகப் புறப்பட்டனர். அப்போது, போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதையடுத்து திருவிக அரசு கலைக் கல்லூரி முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியலின்போது, காவிரி படுகையில் எண்ணெய், எரிவாயு எடுப்பது மற்றும் குழாய் அமைப்பதை தமிழக அரசு தடுக்க வேண்டும், மீத்தேன் திட்டத்தை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மறியல் காரணமாக, திருவாரூர் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செவ்வாய், 9 பிப்ரவரி, 2016
ஒமேகா 3! - அப்படின்ன என்ன?

ஒமேகா 3 (N3 fatty acid எனவும் அழைக்கப்படுகிறது) என்னும் கொழுப்பு அமிலம் நம் உடலில் உற்பத்தியாகாது. இதனை (Essential fatty acid) என்கிறோம். உணவின் மூலம் கிடைக்கும் இந்த கொழுப்பு அமிலம் உடல்நலத்துக்கு இன்றியமையாதது. இது நமக்கு அளிக்கும் ஆரோக்கிய பலன்கள் அதிகம். அன்றாட உணவில் சேர்க்க வேண்டியதும் அவசியம். ஒமேகா 3ன் முக்கிய பலன்களில் ஒன்று இதய நோய்களுக்கு எதிரான பாதுகாப்பு. இதயத்துக்கு ஒமேகா 3 மிகவும் அவசியம் என்று அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் பல ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு ஆய்வுகளுக்குப் பின் தெரிவித்துள்ளது.
இதய நாளங்களில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைப்பதில் ஒமேகா 3 முக்கிய பங்கு வகிக்கிறது. ரத்தம் உறைவதை தடுக்கிறது. இதனால் பக்கவாதம், மாரடைப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுவது குறைகிறது. அதனால், இதய நோயாளிகள் தேவையான அளவு ஒமேகா 3 கொழுப்பை உட்கொள்ள வேண்டும் என அந்த அமைப்பு அறிவுறுத்தி உள்ளது. ஒமேகா 3, நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது. ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர் பிரச்னை உள்ள நோயாளிகளுக்கு ஒமேகா 3 நல்ல பலன் அளிக்கிறது.
புற்றுநோய் வராமல் தடுப்பதிலும் பெரும்பங்கு வகிக்கிறது. ADHD (Attention Deficit Hyperactivity Disorder) பாதிப்புள்ள குழந்தைகளின் கவனச்சிதறலை குறைத்து, அவர்களை ஒருமுகப்படுத்துகிறது. அவர்களின் உள் வாங்கும் திறனை அதிகரிக்கிறது. ஒமேகா 3 பார்வைக்கும் நல்லது. மூளையின் ஆரோக்கியத்துக்கும் இது அவசியம் என இப்போது வலியுறுத்தப்படுகிறது. நினைவாற்றல் செல்களை அதிகரித்து மூளையை சுறுசுறுப்பாக்கவும் இது உதவுகிறது.
தேவையான அளவு ஒமேகா 3 எடுத்துக்கொண்ட தாய்மார்களுக்கு பிறந்த குழந்தைகள் மற்ற குழந்தைகளை விட புத்திக்கூர்மையுடன் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. 3 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு உணவு மற்றும் மாத்திரைகள் மூலம் ஒமேகா 3 கொழுப்பு கொடுத்து ஆராய்ச்சி நடத்தப்பட்டிருக்கிறது. அதில் அவர்களின் கற்றல் திறன், அறிவுத்திறன் நல்ல முறையில் அதிகரித்திருப்பதோடு, அவர்கள் உற்சாகத்துடனும் சுறுசுறுப்புடனும் காணப்படுவதையும் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
கர்ப்பிணிகள் தேவையான அளவு ஒமேகா 3 எடுத்துக்கொள்ளாத பட்சத்தில் பிறக்கும் குழந்தைகள் கவனக்குறைபாட்டுப் பிரச்னைக்கு ஆளாகலாம். ஒமேகா 3ல் ALA (A Linolenic Acid), EPA (Eicosa Pentaenoic Acid), DHA (Aocosa Hexaenoic Acid) என்ற 3 வகைகள் உள்ளன. கடல் உணவுகளில் EPA, DHA வகைகள் இருக்கின்றன. சைவத்தில் ALA மட்டும் இருக்கிறது. மீன்களில் கெளுத்தி, கானாங்கெளுத்தி, மத்தி, நெத்திலி, சால்மன் போன்றவற்றில் ஒமேகா 3 இருக்கிறது. வாரம் 3 முதல் 4 முறை 75 கிராம் அளவுக்கு மீன் சாப்பிடும் போது தேவையான அளவு ஒமேகா 3 கிடைக்கும்.
சைவத்தில் சோயா பீன் ஆயில், கேனோலா ஆயில், வால்நட், ஃபிளாக்ஸ் விதைகள் போன்றவற்றில் அதிகம் இருக்கிறது. சோயாபீன்ஸ், ராஜ்மா, சோயா டோஃபு போன்றவற்றிலும் ஓரளவு உண்டு. தினமும் 4 முதல் 5 டீஸ்பூன் அளவு சோயா பீன் ஆயில் அல்லது கேனோலா ஆயில் பயன்படுத்துவது, 5 அல்லது 6 வால்நட் அல்லது 2 டீஸ்பூன் ஃபிளாக்ஸ் விதைகள் சாப்பிடுவது நல்லது. எண்ணெயை சூடு செய்வதால் ALA அழிவதில்லை. உடலினுள் ALAவின் ஒரு பகுதி EPA, DHA ஆக மாற்றம் பெறுகிறது.
மருந்து மாத்திரைகள் மூலமாகவும் ஒமேகா 3 பெற முடியும். மீனில் இருந்து தயாரிக்கப்படும் மீன் எண்ணெய் மாத்திரைகளில் ஒமேகா 3 இருக்கிறது. இதை தேவைப்பட்டவர்கள் உட்கொள்ளலாம். இருந்தாலும் உணவின் மூலம் பெறும் போது அதனுடன் சேர்த்து அந்த உணவில் உள்ள மற்ற ஊட்டச்சத்துகளும் நமக்குக் கிடைக்கும்...
கற்பூரம் விஷமா? - ஓர் விளக்கம்

இது மாதிரி சிக்கல் ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்? கற்பூரம் போன்று வீட்டில் இருக்கும் வேறு என்னென்ன பொருட்களைக் குழந்தைகளிடம் அனுமதிக்கக் கூடாது?நிபுணர்களிடம் பேசினோம்...
ஸ்ருதி சந்திரசேகரன் (இன்டர்னல் மெடிசின் மற்றும் நாளமில்லா சுரப்பி நிபுணர்)...
‘‘சூடம் தயாரிக்கும்போது கேம்பர் (Camphor) எனும் வேதிப்பொருளை சேர்க்கிறார்கள். இந்த வேதிப்பொருளை மிகச்சிறிய அளவில் மட்டுமே சேர்க்க வேண்டும். ஆனால், கற்பூரம் தயாரிப்பவர்களில் பலர் இந்த விதிமுறையைக் கடைப்பிடிப்பதில்லை. இதனால், அதிக அளவு கேம்பர் கலந்திருக்கும் கற்பூரங்கள்தான் அதிகமாக சந்தையில் விற்பனையாகி நம் வீட்டுக்கு வருகிறது.
கற்பூரத்தை விளையாட்டுத்தனமாக உட்கொள்ளும் குழந்தைகளுக்கு தொண்டை எரிச்சல்,நரம்புத்தளர்ச்சி, உடல் பலவீனமடைதல் ஆகிய சிறிய பிரச்னைகள் ஏற்படலாம். உட்கொண்ட கற்பூரத்தின் அளவு அதிகமாக இருந்தால் வலிப்பு ஏற்படுவதுடன், கோமா நிலைக்குச் சென்றுவிடும் அபாயமும் ஏற்படும். உடனடியாக கவனிக்காவிட்டால் மரணத்திலும் கொண்டு சென்றுவிடலாம். அதனால், கற்பூரம் போன்ற பொருட்களை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத வகையில் வைப்பது அவசியம்.
இதேபோல், Bisphenol A எனப்படும் வேதிப்பொருள் கலந்து தயாரிக்கும் பிளாஸ்டிக் பொருட்களையும் குழந்தைகளிடம் புழங்கவிடக் கூடாது. பிஸ்பெனால் கலந்த பாட்டில்களில் தண்ணீரை குழந்தைகளுக்கு கொடுத்தனுப்புவதும் கூடாது. இந்த வேதிப்பொருள் குழந்தைகளின் நாளமில்லா சுரப்பிகளை பாதிக்கும்... வளர்ச்சியைத் தடுக்கும்... பருமனை அதிகரிக்கும், இதயம் மற்றும் சுவாசம் சம்பந்தமான பிரச்னைகளை ஏற்படுத்தும்.

‘‘அரோமெட்டிக் ஹைட்ரோ கார்பன் வகையைச் சேர்ந்த கேம்பர் கற்பூரத்தைச் சிறிய அளவு உட்கொண்டாலும் நரம்பு மண்டலமும் மூளையும் பாதிக்கும். இந்த பாதிப்பின் முதல் அறிகுறியாக குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்படும். இந்தக் குழந்தைக்கு அதனால்தான் வலிப்பு ஏற்பட்டிருக்கிறது. உட்கொண்ட கற்பூரத்தின் அளவு குறைந்த அளவு என்றாலும் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். கற்பூரத்தைக் கடித்து வெகுநேரம் வரை கண்டுகொள்ளாமல் விட்டால் உயிருக்கே ஆபத்தாகிவிடலாம்
என்பதால் தாமதிக்கக் கூடாது.
கரப்பான் பூச்சிகளை விரட்டுவதற்காக பயன்படும் பாச்சை உருண்டைகளும் நச்சுத்தன்மை உடையவையே. கற்பூரத்தை சர்க்கரைக் கட்டி என்று குழந்தைகள் நினைப்பதுபோல, பாச்சை உருண்டைகளை ‘மிட்டாய்’ என நினைத்து சாப்பிட்டுவிடுவார்கள். இதன் விளைவும் கற்பூரத்தைப் போன்றதுதான். பாத்ரூமில் பயன்படுத்தப்படும் ஆசிட், துணிகளின் கறை நீக்கப் பயன்படுத்தும் திரவங்கள், மண்ணெண்ணெய் ஆகியவற்றை தண்ணீர் பாட்டிலில் வைத்திருப்பது ஆபத்தானது. குழந்தைகள் இவற்றைக் குடித்துவிடும் அபாயம் உண்டு.
இதுபோன்ற சிக்கலான நேரத்தில் நச்சை வெளியே எடுக்கிறேன் என உப்புக் கரைசல் அல்லது புளிக் கரைசலை வாய்க்குள் ஊற்றுவார்கள். இது தவறான பழக்கம். இதனால், நுரையீரலும் உணவுக்குழாயும் பாதிக்கப்படும். அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து சிகிச்சையை ஆரம்பிப்பது மட்டுமே பயனளிக்கும். பென்சிலின் முனை, ரப்பர், இங்க், ஊதுபத்தி ஆகிய பொருட்களில் அதிக அளவில் நச்சு கிடையாது என்றாலும் குழந்தைகள் கடித்துவிட்டால் மருத்துவரிடம் காட்டி பரிசோதனை செய்துகொள்வது நல்லது. முடிந்த வரை ஆபத்தான நச்சுப் பொருட்களை குழந்தைகள் கண்களில் படாதவாறு வைப்பது பாதுகாப்பானதே.’
Tks
http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=4136&cat=500
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை -- கலெக்டர்.மதிவாணன்.

வாக்குப் பதிவு இயந்திரங்களை அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்பு வாக்குப் பதிவு இயந்திரங்கள் இறக்கப்படுவதைப் பார்வையிட்ட ஆட்சியர் எம். மதிவாணன் பிறகு நடைபெற்ற அனைத்துக் கட்சியினர் பங்குபெற்ற கூட்டத்தில் பேசியது:
திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதியில் 270, மன்னார்குடியில் 277, திருவாரூர் தொகுதியில் 301, நன்னிலம் தொகுதியில் 304 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. 2016 சட்டப் பேரவை தேர்தல் வாக்குபதிவுக்காக பிகார் மாநிலத்திலிருந்து 1,493 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2 ஆயிரம் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு பேச்சு

குழந்தைகளை பாதுகாக்க
திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சைல்டுலைன் அமைப்பின் சார்பில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் சட்டம் குறித்த கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் தலைமை தாங்கி பேசும்போது, குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. குழந்தைகள் இல்லங்கள் மற்றும் மகளிர் விடுதிகள் உரிய முறையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
இதில் சைல்டுலைன் அமைப்பின் பேராசிரியர் அனில்குமார் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் சட்டம் மற்றும் நடவடிக்கைகள் பற்றி பேசினார்.
கூட்டத்தில் அரசு குழந்தைகள் நல டாக்டர் கண்ணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜோசியாராஜன், குழந்தைகள் நலக்குழும தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட சைல்டுலைன் அமைப்பின் இயக்குனர் ஜீவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சைல்டு லைன் திட்ட ஒருங்கிணைப்பாளர் மாரிதாஸ் நன்றி கூறினார்.
திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை பணிகள் விரைவுபடுத்தப்படுமா?

சென்னை-காரைக்குடி ரயில் பாதை கடந்த 120 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு, சென்னையில் இருந்து ராமேஸ்வரம், காரைக்குடி, மானாமதுரை ஆகிய ஊர்களுக்கு கம்பன், மனோரா, போட்மெயில், சேது, ராமேஸ்வரம், மானாமதுரை ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது.

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பாக விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதைத் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டதில் இருந்து காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராமபட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருநெல்லிக்காவல், மாவூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நான்கு மாவட்ட மக்கள் சென்னைக்கு நேரடி ரயில் வசதியை இழந்தனர். இந்தப் பழைமையான வழித்தடம் அகலப்பாதையாக மாற்றம் செய்யும் பணிகள் தாமதமானதற்கு அரசியல் உள்நோக்கமும் ஒரு காரணம் என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கிடையே சென்னையில் இருந்து காரைக்குடிக்கு இடையேயான 450 கி.மீ. தூரத்தில் திருவாரூர் வரையிலான 300 கி.மீ. தூரம் மூன்று கட்டமாக அகலப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டு ரயில் சேவைகள் தொடங்கப்பட்ட நிலையில், அடுத்த கட்டமாக 301-வது கி.மீட்டரான திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வரையிலான பணிகளைத் தொடங்காமல், காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை வரையிலான 78 கிமீ தூரம் ரயில்சேவை நிறுத்தப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.
இதனால் எந்த ரயில் சேவையும் கிடைக்காது எனத் தெரிந்தும் இந்தப் பாதையை அரசியல் முட்டுக்கட்டைகள் காரணமாக ரயில்வே நிர்வாகம் தொடங்கியது.
இதனால் திருவாரூர்-முத்துப்பேட்டை வரையில் 60 கி.மீ. தூரம் மனிதசங்கிலியும் வர்த்தகர் சங்கத்தின் சார்பில் கடைஅடைப்பு போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், திருவாரூர்-பட்டுக்கோட்டை ரயில் சேவையைத் தொடங்க வேண்டிய கட்டாய நிலைக்கு ரயில்வேதுறை ஆளாக்கப்பட்ட உடன் பயணிகள் ரயில் சேவையை நிறுத்தி, பணிகள் திருவாரூரில் இருந்தும் திருத்துறைப்பூண்டி வழியாகவும் ஒரே சமயத்தில் தொடங்கப்படுமென அறிவித்து பணிகளைத் தொடங்கினர்.

திருவாரூர்-காரைக்குடி வழித்தடம் அகலப்பாதையாக மாற்றம் செய்யப்படாத நிலையில் புதிய வழித்தடங்களுக்கு இணைப்பு பாதை வசதியே கிடையாது.
இந்தத் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் முழுத் தொகையும் இந்தத் திட்டத்திற்கு மட்டுமே செயல்படுத்தப்படாமல் பல திட்டங்களுக்கும் செய்யப்படுவதால் இந்தத் திட்டப் பணிகளில் முன்னேற்றம் வெகு குறைவாகவே உள்ளது.
எனவே, மத்திய ரயில்வே அமைச்சர் இந்த விஷயத்தில் நேரடியாகத் தலையிட்டு பாரம்பரியமிக்க திருவாரூர் - காரைக்குடி அகல ரயில்பாதை திட்டத்திற்கு உயர் முன்னுரிமை அளித்து போதிய நிதி ஒதுக்கீடு செய்து விரைந்து பணிகளை முடித்து சென்னைக்கு நேரடி ரயில் வசதியை தொடங்க வேண்டுமென்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
14-ந் தேதி நடைபெறும் முகாமில் 10 ஆயிரம் பேருக்கு வேலை - அமைச்சர் காமராஜ்
நன்னிலம் அருகே, 14-ந் தேதி நடைபெறும் முகாமில் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அமைச்சர் காமராஜ் கூறினார்.
வேலைவாய்ப்பு முகாம்
திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்கம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள சொரக்குடி ஆரூரான் பாலிடெக்னிக் கல்லூரியில் வருகிற 14-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன் ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு உணவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
10 ஆயிரம் பேருக்கு வேலை
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி சொரக்குடி ஆரூரான் பாலிடெக்னிக் கல்லூரியில் 14-ந் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 350-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து வேலை வழங்க உள்ளன. எனவே முகாமில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை கிடைக்கும்.
இதில் 8-ம் வகுப்பு படித்தவர்கள், 12-ம் வகுப்பு படித்தவர்கள், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படித்தவர்கள், என்ஜினீயரிங் பட்டதாரிகள், கலை, அறிவியல் பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம். அதேபோல, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் திறன் எய்தும் பயிற்சிக்கான பதிவும், வெளி நாட்டு வேலைக்கான பதிவும் நடைபெறும்.
10 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதால் ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் முகாம் பற்றிய தகவல்களை மக்களிடம் முழுமையாக கொண்டு சேர்க்க வேண்டும். வேலைவாய்ப்பு முகாமையொட்டி சிறப்பு பஸ் வசதி, மருத்துவ வசதிகள் செய்யப்படும். வேலை வாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு என பிரத்யேகமாக தனி அரங்கு அமைக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் காமராஜ் கூறினார்.
ஆய்வு
கூட்டத்தில் வேலைவாய்ப்புத்துறை மண்டல இணை இயக்குனர் முரளிதரன், துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி, உதவி இயக்குனர் மணி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் அழகிரிசாமி, உதவி கலெக்டர்கள் முத்துமீனாட்சி, செல்வசுரபி, மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி அம்பிகாபதி, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி செல்லத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக சொரக்குடி பாலிடெக்னிக் கல்லூரிக்கு சென்ற அமைச்சர் அங்கு நடைபெற்று வரும் வேலைவாய்ப்பு முகாம்களுக்கான அரங்குகள் அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
tks
daily thanthi
மகளிர் விடுதியை கண்காணிக்க வேண்டும் மாவட்ட எஸ்.பி. பேச்சு
திருவாரூர் மாவட்டத்திலுள்ள மகளிர் விடுதி பாதுகாப்பாக செயல்படுகிறதா என காவல்துறையினர் கண்காணிக்க வேண்டுமென்றார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன்.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சனிக்கிழமை குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மேலும் அவர் பேசியது:
குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவு மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. அதன் மூலம் குழந்தைகள் பாலியல் குற்றங்களுக்கு ஏதேனும் ஆட்படுகிறார்களா என்று கண்காணிக்கப்பட்டு வருகிறது. தவிர, குழந்தைகள் இல்லங்கள் மற்றும் மகளிர் விடுதிகளை நேரில் சென்று காவல்துறையினர் கண்காணிக்க வேண்டுமென்றார் அவர்.
மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த அலுவலர்களுக்கு சென்னை சைல்டுலைன் இந்தியா பவுண்டேஷன் நிர்வாகி அனில்குமார், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் சட்டம் மற்றும் நடவடிக்கைகள் குறித்தும் அதன் உட்பிரிவுகள் குறித்தும் விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் கண்ணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜோசியாராஜன், குழந்தைகள் நலக்குழும தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சனிக்கிழமை குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மேலும் அவர் பேசியது:
குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவு மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. அதன் மூலம் குழந்தைகள் பாலியல் குற்றங்களுக்கு ஏதேனும் ஆட்படுகிறார்களா என்று கண்காணிக்கப்பட்டு வருகிறது. தவிர, குழந்தைகள் இல்லங்கள் மற்றும் மகளிர் விடுதிகளை நேரில் சென்று காவல்துறையினர் கண்காணிக்க வேண்டுமென்றார் அவர்.
மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த அலுவலர்களுக்கு சென்னை சைல்டுலைன் இந்தியா பவுண்டேஷன் நிர்வாகி அனில்குமார், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் சட்டம் மற்றும் நடவடிக்கைகள் குறித்தும் அதன் உட்பிரிவுகள் குறித்தும் விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் கண்ணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜோசியாராஜன், குழந்தைகள் நலக்குழும தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதன், 3 பிப்ரவரி, 2016
அனைத்து ஊராட்சிகளிலும் கிராம விளையாட்டுப் போட்டிகள்: ஆட்சியர்

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் உள்ள 430 ஊராட்சிகளிலும் பிப். 20 ஆம் தேதி வரை கிராம விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது.


தனித்திறன் போட்டிகள் நடக்கும் நாள், நேரம் ஊராட்சித் தலைவரால் முன்பே அறிவிக்கப்படும். போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பெறுபவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்படும்.
இதுகுறித்த கூடுதல் விவரங்களை வட்டார வளர்ச்சி அலுவலர்களை அணுகி தெரிந்துகொள்ளலாம்.
திருத்துறைப்பூண்டி :அமைப்புசாரா தொழிலாளர்களின் உறுப்பினர் சேர்க்கை முகாம்

கொரடாச்சேரியில் பேரூராட்சித் தலைவர் செந்தில்குமார் ஒன்றியக்குழுத் தலைவர் தாழை.மு. அறிவழகன், நீடாமங்கலத்தில் ஒன்றியக்குழுத் தலைவர் ராஜேந்திரன், திருத்துறைப்பூண்டியில் வார்டு உறுப்பினர் நடராஜன், கோட்டூரில் ஒன்றியக்குழுத் தலைவர் ஜீவானந்தம், துணைத் தலைவர் தங்கையன் ஆகியோர் பங்கேற்றனர். முகாம்களில் 560 தொழிலாளர்கள் பங்கேற்று பயன்பெற்றனர். புதிதாகப் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு பதிவு அட்டை வழங்கப்பட்டது என்று மாவட்டத் தொழிலாளர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெயில் எரிவாயு குழாய்கள் அமைக்க உச்ச நீதிமன்றத்தின் அனுமதிக்கு எதிர்ப்பு

கெயில் நிறுவனம் கேரள மாநிலத்திலிருந்து கர்நாடகத்துக்கு தமிழக விளைநிலங்களில் குழாய் பதித்து எரிவாயுவை கொண்டு செல்லவுள்ளது. இதற்காக சேலம், கோவை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களில் குழாய் பதிக்கும் திட்டத்துக்காக வயல்களை நாசப்படுத்தி, தென்னை மரங்களை வேறோடு பிடுங்கி எறிந்து பணியைத் தொடங்கியது.
இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து தமிழக முதல்வர் ஜெயலலிதா விவசாயிகளைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு ஆதரிக்காது எனக் கூறினார்.
இதற்கிடையில் இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கெயில் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், செவ்வாய்க்கிழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தீர்ப்பில் இத்திட்டம் தொடங்கும்போதே ஏன் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. வாக்கு வங்கியை கருத்தில்கொண்டு தமிழக அரசு செயல்படுகிறதா எனக் கூறி கெயில் நிறுவனத்துக்கு சாதகமாக தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பு காவிரி டெல்டா பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதால் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மன்னார்குடி எஸ். ரெங்கநாதன் (காவிரி நீர்ப் பாசன விவசாயிகள் சங்கப் பொதுச் செயலர்): விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பதன் மூலம் அங்கு வேரூன்றும் மரங்களை நட முடியாது.
வீடுகள் கட்ட முடியாது. நெல், எள் ஆகியவற்றை மட்டுமே சாகுபடி செய்ய இயலும். குழாய் பதித்திருக்கும் இடத்தில் ஏதேனும் தீ விபத்து போன்ற இடர்பாடுகள் ஏற்பட்டால் விவசாயிகள் பொறுப்பேற்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது.
விவசாய நிலங்களில் குழாய் பதிக்கும் முன் அந்தந்த விவசாயிகளிடம் கலந்தாலோசித்து, உரிய சந்தை விலையை நிர்ணயித்து இடத்தை கிரயமாக கெயில் நிறுவனம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
விவசாய நிலங்களில் அமல்படுத்துவதைக் காட்டிலும் சாலையோரமாகக் கொண்டு செல்வது நல்லது. விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றார்.
வெ. சத்தியநாராயணன் (காவிரி டெல்டா விவசாயிகள் குழுமப் பொதுச் செயலர்):
நீதிமன்றத்தைப் பொருத்தவரை இருக்கும் சட்டத்தைப் பயன்படுத்தி தீர்ப்பு வழங்குகிறது. விவசாயப் பகுதி உள்ளிட்ட குறிப்பிட்ட சில பகுதிகளைப் பாதுகாக்க சட்டத்தில் இடம் இல்லாத வகையில் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் இயற்ற வேண்டும். இதன்மூலம் விவசாயிகள், விவசாய நிலங்கள் பாதுகாக்கப்படும் என்றார்.
ஜி. வரதராஜன் (மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்க திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்): ஏற்கெனவே காவிரி டெல்டாவில் குழாய் மூலம் கெயில் நிறுவனம் எண்ணெய் வளங்களைக் கொண்டு செல்ல பூமிக்கடியில் குழாய் பதித்துள்ளது. இக்குழாய்கள் பல இடங்களில் வெடித்து வயல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வெள்ளக்குடி, கமலாபுரம், கருப்பூர் உள்ளிட்ட கிராமங்களில் வயல்களும், விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் மரம் நடவோ, டிராக்டர்களை வயலில் இறக்கவோ இந்தச் சட்டம் அனுமதிக்காது. அங்கு ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் அதற்கு விவசாயிகளிடம் அபராதம் வசூலிக்கலாம் எனவும் கூறுகிறது.
எனவே, தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு, மேல்முறையீடு செய்து விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும்.
இத்திட்டம் தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் தொடங்கி அனுமதிக்கப்பட்டால், இதை காரணம் காட்டி வருங்காலத்தில் மீத்தேன் திட்டத்தை காவிரி டெல்டா பகுதிகளில் தொடங்க வழிவகுக்கும் என்பதால் எக்காரணம் கொண்டும் இத்திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்றார்.
இதுகுறித்து தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் தீர்ப்பு குறித்து உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும், விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் அனுமதிக்கக் கூடாது. தமிழகத்திலுள்ள விவசாயப் பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கருத்தாக உள்ளது.
சிறு தானியப் பயிரை ஊக்குவிக்க நடவடிக்கை

திருவாரூர் மாவட்டம் அருகில் விஸ்வநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வயல் தின விழாவில் அவர் பேசியது:
திருவாரூர் மாவட்டத்தில் சிறு தானியப் பயிர் சாகுபடியை ஊக்குவிப்பது உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சிப் பணிக்கு மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியிலிருந்து ரூ. 1 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
அதனடிப்படையில், டெல்டா மாவட்டங்களில் சிறு தானியப் பயிர்களை சாகுபடி செய்தல் மற்றும் சிறுதானியங்களை மதிப்புக் கூட்டல் தொடர்பான திட்டம் கொரடாச்சேரி அருகே விஸ்வநாதபுரத்தில் செயல்படுத்த ரூ. 16.15 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
திட்டத்தில் குதிரைவாலி சிறு தானியத்தை உற்பத்தி செய்ய 20 பயனாளிகள் தேர்ந்தெடுத்து 20 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, முதல் கட்டமாக 12 விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விதைகள் வழங்கப்பட்டுள்ளன.
குதிரைவாலி வறட்சியைத் தாங்கி வளரும் பயிராகும். இதை உற்பத்தி செய்ய குறைந்த தண்ணீரே போதும் என்றாலும் தண்ணீர் தேங்கியிருந்தாலும் விளைச்சல் பாதிக்காது.
இத் திட்டத்தின் மூலம் சிறுதானியங்களை மதிப்புக் கூட்டுவதற்குத் தேவையான கருவிகளும் வழங்கப்பட்டு அவற்றை பிஸ்கட் மற்றும் இதர மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றி விற்பனை செய்ய இருப்பதால் விவசாயிகள் அதிக லாபம் பெறலாம்.
பெண்கள் விவசாயத்தில் முழுமையாக ஈடுபட வேண்டுமென்பதே திட்டத்தின் நோக்கம். சிறு தானியங்களை பள்ளி குழந்தைகள் உணவில் சேர்த்துக் கொண்டால் புத்திக் கூர்மைக்கு மிகவும் நல்லது என்றார் சாந்தா ஷீலா நாயர். விழாவில் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன், வேளாண் இணை இயக்குநர் க. மயில்வாகணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)