வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

வியப்பூட்டும் மனித உடல் பற்றி பல செய்திகளும் தகவல்களும் உள்ளன. அவற்றுள் சில பின்வருமாறு.


முப்பது நிமிடங்களில் மனித உடலிலிருந்து உருவாக்கப்படும் வெப்பத்தினால் அரை கலன் நீரை கொதிக்க வைக்க முடியும்.
முப்பது நிமிடங்களில் மனித உடலிலிருந்து மில்லியன் கணக்கான கலங்கள் (Cells) இறந்து கீழே விழ புதிய கலங்கள் அவற்றுக்குப் பதிலாக உருவாக்கப்படுகின்றன.
உலகிலுள்ள எல்லா தனிக் கணினிகளும் (Personal Computer) சேர்ந்து ஒன்றாக 6.4 குயின்டில்லியன் (6,400,000,000,000,000,000) அறிவுத்தலை ஒரு வினாடியில் செய்து முடிக்கக் கூடியதாக இருக்க, ஒரு வினாடியில் இதே அளவு எண்ணிக்கையிலான நரம்பு தூண்டல் சமிக்கைகளை ஒரு மனித மூளை அனுப்புகிறது. எனவே உலகிலுள்ள எல்லா தனிக் கணினிகளும் 6.4 குயின்டில்லியன் தரவினைக் கையாள எடுக்கும் ஒரு வினாடி நேரத்தை ஒரே ஒரு மூளை மாத்திரம் கையாள்கிறது.
ஒரு மணி நேர நாடித் துடிப்புக்கு தேவைப்படும் இருதயத்தின் சக்தியானது, ஒரு டன் பாரமுடைய பொருளை மூன்று அடி தூரத்திற்கு தரையிலிருந்து தூக்கத் தேவைப்படும் சக்திக்குச் சமனானதாகும்.
மனிதன் மட்டுமே விழுங்குவதையும் சுவாசிப்பதையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாத பாலூட்டி ஆவான். ஏனைய பாலூட்டிகளுடன் ஓப்பிடும்போது நம்முடைய குரல்வளை தொண்டையில் கீழே அமைந்திருப்பது இதற்கான காரணமாகும். இதனால் எம்மால் தாராளமான ஒலிகளை பேசுவதற்கு பயன்படுத்த முடிகிறது. விழுங்குவதையும் சுவாசிப்பதையும் ஓரே நேரத்தில் செய்தால் மூச்சுத்திணறல் ஏற்படும்.
6.4 குயின்டில்லியன் தரவினைக் கையாள மூளை ஒரு வினாடி நேரத்தை மாத்திரம் எடுத்துக் கொண்டாலும், விழுங்குவதையும் சுவாசிப்பதையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாமை போன்ற பலவீனங்களை நம் உடல் கொண்டிருப்பதால், அது நூறு வீதம் பூரணமானதல்ல. ஆகவே, நமக்கு உதவ கணினி தேவைப்படுறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka