வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

திருவாரூர் மாவட்டத்தில் நலிந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய உதவித்தொகை


விளையாட்டுத்துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
இதற்கான குறைந்தபட்ச தகுதிகளாக தேசிய அளவு விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தின் சார்பாக பங்கேற்று இருக்க வேண்டும்.
தேசிய அளவிலான போட்டிகளில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பள்ளி, கல்லூரி காலங்களில் சாதனை படைத்தவர்கள் மட்டுமே தகுதிபெறுவர். அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுச் சங்கங்களினால் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டிருத்தல் வேண்டும். முதியோருக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெறத்தகுதியில்லை.
மேலும் 2014 ஏப்ரல் முதல் தேதியன்று 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும் விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ. 6000–க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரால் சான்றொப்ப மிடப்பட்ட, விளையாட்டுச் சான்றிதழ் நகல்கள், வருமானச் சான்று நகல், வயது குறித்த சான்று நகல் ஆகியவை கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். மத்திய அரசின் விளையாட்டு வீரருக்கான ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் மத்திய, மாநில அரசின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.
இவ்ஓய்வூதிய தொகை பெற விரும்புவோர் நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தினை அவர்கள் பெற்ற விளையாட்டுச் சான்றிதழ் நகலுடன் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் ரூ.10 செலுத்தி, அலுவலக வேலை நாட்களில் பெற்றுக் கொள்ளலாம். பெறப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, திருவாரூர் மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் 25.02.2015–க்குள் அளிக்கப் பட வேண்டும் என மாவட்ட கலெக்டர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka