திங்கள், 9 பிப்ரவரி, 2015

கட்டடம் கட்ட குழி வெட்டியபோது கிடைத்த 4 வெண்கலச் சிலைகள்

திருத்துறைப்பூண்டி அருகே கால்நடை மருத்துவமனைக்கு கட்டடம் கட்ட பள்ளம் தோண்டியபோது, 4 வெண்கல சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

திருத்துறைப்பூண்டியை அடுத்த மணலி கிராமம், பரப்பாகரம் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் கழிப்பறைக்கான தரைமட்டத் தொட்டிக்கு பள்ளம் தோண்டும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது, 2 அடி உயரமுள்ள வெண்கல நடராஜர் சிலை, பெருமாள் சிலை, தலா ஒரு அடி உயரமுள்ள ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

இந்த சிலைகள் குறித்து ஊராட்சித் தலைவர் குணமணி அளித்த தகவலின்பேரில், திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் வி. மதியழகன், திருத்துறைப்பூண்டி காவல் ஆய்வாளர் ஏ. ஆனந்தவேலு ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சிலைகளை கைப்பற்றினர்.

சிலைகள் திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. தொல்லியல் துறையினரின் ஆய்வுக்கு பிறகே சிலைகள் குறித்த முழுமையான தகவல்கள் தெரிய வரும் என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.

Picture are file

tks

Dinamani

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka