சனி, 28 பிப்ரவரி, 2015

ஜெருசலேம் புனிதப் பயணம் செல்ல விண்ணப்பிக்கலாம்



திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு தமிழக அரசு ஒருவருக்கு
ரூ. 20,000 நிதியுதவி வழங்குகிறது. 2015 மார்ச் முதல் மே வரை புனிதப் பயணம் இருக்கும். விண்ணப்பத்தாரர் தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவராக இருக்க வேண்டும். 1.1.2015 தேதியிலிருந்து குறைந்தபட்சம் ஓராண்டு செல்லத்தக்க பாஸ்போட், உடற்தகுதிக் கான மருத்துவச் சான்றிதழ். விண்ணப்பிப்பவர்கள் அரசு வழங்கும் ரூ. 20,000 தவிர மீதமுள்ள தொகையை செலுத்த வேண்டும். பயணத்துக்கு பிறகு அரசின் நிதியுதவி வழங்கப்படும்.

ஒரு குடும்பத்தில் விண்ணப்பதாரரை சேர்த்து 4 பேர் பயணம் மேற்கொள்ளலாம். 2 வயது நிறைவடைந்த 2 குழந்தைகளும் இருக்கலாம். 70 வயது முடிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பயண விவரத்தை ஜெருசேலம் புனித பயணக் குழு முடிவு செய்யும். விண்ணப்பத்தாரர் பயண மாதத்தை குறிப்பிட வேண்டும்.

விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினாó நல அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து ஜெருசலேம் புனித பயணத்துக்கான விண்ணப்பம் என்று குறிப்பிட்டு மேலாண்மை இயக்குநாó, தமிழ்நாடு சிறுபான்மையினாó பொருளாதார மேம்பாட்டுக் கழகம், 807 (5-வது தளம்), அண்ணா சாலை, சென்னை 600002 என்ற முகவாõக்கு மார்ச் 6-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka