சனி, 28 பிப்ரவரி, 2015

திருத்துறைப்பூண்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கும் இடம் ஆய்வு





திருத்துறைப்பூண்டியில் ஒருங்கிணந்த நீதிமன்ற வளாகம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை புதன்கிழமை திருவாரூர் மாவட்ட நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க வேண்டும் என்று வழக்குரைஞர்கள் சங்கத்தினர் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், தமிழக அரசு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க ரூ. 4 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அதற்கான இடத்தை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் செயல்பட்டு வரும் இடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தை திருவாரூர் மாவட்ட நீதிபதி ஜாகீர் உசேன், தலைமை குற்றவியல் நீதிபதி ராம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது, மாவட்ட உரிமையியல் நீதிபதி எம். மகாலெட்சுமி, குற்றவியல் நீதிபதி கே.எஸ். சிவா, வழக்குரைஞர் சங்க நிர்வாகிகள் அருள்செல்வன், ரஜினி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மலிவு விலை சும்மா ட்ரை பண்ணி பாருங்க

Chitka